Thursday, April 18, 2019

திருவெள்ளறை புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்) திருக்கோயில் - Thiruvellarai Pundarikakshan Temple

திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப் பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது.


மொட்டை கோபுரத்தின் முன்னே பதினெட்டு படிகள் – பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோபுரத்தினைத் தாண்டினால் மற்றொரு சிறிய கோபுரம் – ஆனால் முழுமையான கோபுரம். இந்தக் கோபுரத்தின் கீழே நான்கு படிகள் – இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.  அதன் பிறகு உள்ளே சென்றால் பலிபீடம் – அதை வலம் வந்து முன்னே சென்றால் – ஐந்து படிகள் – அவை பஞ்ச இந்த்ரியங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.


























இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண இரண்டு வாயில்கள் உண்டு – உத்தராயண வாயில் மற்றும் தக்ஷிணாயன வாயில். தை முதல் ஆணி வரை உத்தராயண வாயில் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் தக்ஷிணாயன வாயில் வழியாகவும், பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும்.

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் செந்தாமரைக் கண்ணன். பின்னாலே சூரியனும் சந்திரனும் பக்கத்திற்கு ஒன்றாக நின்று கொண்டிருக்கிறார்கள். அருகில் ஒரு புறத்தில் ஆதிசேஷன் மனித ரூபத்தில் நின்று கொண்டிருக்கிறார் [ பொதுவாய பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திருக்கோவில்களில் ஆதிசேஷன் மீது தான் சயனித்திருப்பார். இங்கே நின்ற திருக்கோலம் என்பதால், ஆதிசேஷனும் நின்ற கோலத்தில்!] மற்றொரு பக்கத்தில் மார்க்கண்டேய மகரிஷியும் பங்கஜ வல்லித் தாயாரின் உற்சவ மூர்த்தியும் உண்டு.














குடவரைக் கோவில்










கோவிலிலுள்ள மரங்களில் கிளிகள் (ரீங்காரம்)






பல்லவர் காலத்து படிக்கிணறு







படிக்கிணறு காணொளி 



No comments:

Post a Comment