Thursday, April 18, 2019

திருவானைக்கோவில் - Thiruvanaikoil

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

பஞ்சபூதத் தலங்கள்:

கோவில் பெயர்
குறிக்கும் பூதம்
இடம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
நிலம்
காஞ்சிபுரம்
திருவாரூர்
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில்
நெருப்பு
திருவண்ணாமலை
திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
நீர்
திருச்சி
சிதம்பரம் நடராசர் கோயில்
ஆகாயம்
சிதம்பரம்
திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
காற்று
திருக்காளத்தி

காலையிலிருந்து சுட்டெரித்த வெயில் பஞ்சபூத தலங்களில் நீருக்கான சிவாலயத்திற்கு நாம்  வரும்பொழுது நல்ல மழை பொழிந்தது. சிவனே மழையாய் அருள் பொழிந்தது  போல!







































மண் வாசனையோடு மழையோடு இறையருளை உணர்த்த வார்த்தைகளில்லை ... திருவானைக்கோவில் சென்று உணருங்கள்!


No comments:

Post a Comment