Saturday, December 11, 2010

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் - Periyar Science and Technology Centre

சென்னையில், பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று. இங்கு முப்பரிமாணக் காட்சி (3D Show), கோளரங்கம், அறிவியல் விளையாட்டுகள், பூங்கா... என எல்லாமும்!

சமுத்திரங்களின் நீரோட்டங்கள், ஆழங்கள் மற்றும் நாடுகளின் நில அமைப்புகள் என புத்தகத்தில் படித்த பலவும் இங்கு மாதிரிகளாய் ... அனைவரும் அறியும் வகையில்!

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்


வனொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி/ஒளி சாதனங்கள்














பிர்லா கோளரங்கம்






சூரிய கடிகாரங்கள்




பூங்கா...









Tuesday, November 30, 2010

கொடைக்கானல் - Kodaikanal

கொடைக்கானல் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

Bear Shola Falls

An ideal picnic spot 1.6 km from bus stand and within 2 Kms of the lake, where once bears came to drink water. The approach is rugged hill path. The falls are at the best in rainy season.




View from Silent Valley




மதிக்கெட்டான் சோலை


பேரிஜம் ஏரி - Berijam Lake


பிரையன்ட் பூங்கா - Bryant Park




ஃபைன் மரங்கள் - Pine Forest


தூண் பாறை - Pillar Rock



பசுமை பள்ளத்தாக்கு - Green Valley


சிற்றருவி


செட்டியார் பூங்கா - Chettiyar Park



தேவாலயம் - La Salette Church


பாம்பார் அருவி - Pambar Falls



Dolphin Nose செல்லும் வழி


மழைக் காலமென்பதால் வழியெங்கும் அருவிகள், நீருற்றுகள்


Dolphin Nose



குறிஞ்சியாண்டவர் கோவில் - Kurinjiyandavar Temple


Coaker's Walk


 வெள்ளி அருவி - Silver cascade


மலையருவி


தலையாறு அருவி / எலிவால் அருவி - Thalaiyar / Rat Tail Falls


தலையாறு அணை



Tuesday, November 9, 2010

திருச்சி மலைக்கோட்டை - Trichy Rock Fort

திருச்சி மாநகரின் அடையாளமே மலைக்கோட்டை எனலாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது "மலைக்கோட்டை". இங்குள்ள குகைக் கோவில் கி.பி. 560 ல் பல்லவர்களால் கட்டப்பட்டது.

மலையடிவாரத்தில் "மாணிக்க விநாயகர்" கோவிலும்,
மலையை வெட்டி கட்டினாற் போல் மலையின் பாதியில் "தாயுமானவர்" கோவிலும்,
உச்சியில் "உச்சி பிள்ளையார்" கோவிலும் அமைந்துள்ளன.

இம்மலையின் (பாறையின்) வயது 3.8 பில்லியின் ஆண்டுகளுக்கு மேல். உலகில் மிக பழமையான (இமயத்தை விட மூத்த) பிரசித்திப் பெற்ற உயரமான மற்றும் பெரியதுமான பாறை, இம்மலைக் கோட்டையின் பாறை.

நுழைவாயில்


மாணிக்க விநாயகர் கோவிலைக் கடந்து, மலையின் உச்சி நோக்கி ...


பார்வையாளர் அனுமதியில்லா கோவில் ... சற்றே சிதிலமடைந்து (இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் பல உள்ளனவாம்.)


நூற்றுக்கால் மண்டபம்

கோட்டைச் சுவர்



உச்சி நோக்கி ... படிகள்



கதைக் கூறும் ஓவியங்கள்


பல்லவர் குகை


இத்துனை சிறப்பு வாய்ந்த இத்தலம் தற்சமயம் மலைக்கோட்டையா? காதலர்க் கோட்டையா? என ஐயமாய் !!!

காதலுக்கு நாம் எதிரியில்லை தான், ஆயினும் பாறையையோ சிற்பங்களையோ ரசிக்க முடியாமல், புகைப்படமெடுக்க முடியாமல் எங்கும் காதலர்கள். (பலர் பலவிதமான அத்துமீறல்களோடு ...)








உச்சிப் பிள்ளையார் புராணம்

இராமாயணப் போருக்குப் பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.



உச்சி பிள்ளையார் கோவிலும், மணி மண்டபமும் (விநாயகரின் வலம்புரி துதிக்கைப் போல்)





தாயுமானவர் புராணம்

இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.





தெப்பக்குளம்