Sunday, January 15, 2017

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் - Thiruneermalai Neervanna Perumal Temple


திருநீர்மலை

இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் அருள் புரிகின்றார்.

திருநீர்மலை குறித்து நமது பதிவு(கள்)

திருநீர்மலை - Thiruneer Malai

நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயிலிலிருந்து திருநீர் மலை


திருமாலின் அவதாரங்கள் .. சிற்பங்களாய் மண்டப கோபுரங்களில்!


கோபியர்களுடனான கண்ணனின் விளையாட்டு ... கோபுரங்களில் சிற்பங்களாய்!





Saturday, January 7, 2017

கல்குவாரி திரிசூலம் - Gravel Quarry Tirusulam


திரிசூலம் குறித்த நமது முந்தைய பதிவு(கள்)

திரிசூலம் (1)

சென்னை நகருக்குள் விதவிதமான அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ... என பெரும்பாலான கட்டிட பணிகளின் முக்கிய மூலப் பொருளான ஜல்லிக் கற்கள் ... பல்லாவரம் மற்றும் திரிசூலம் கல்குவாரிகளில் இருந்து தோண்டப் பட்டவையே ...

நன்றி: Google Maps



சென்னைக்குள் இப்படி ஒரு புழுதிக் காட்டிற்குள் மலைகள் கற்களாய் சிதறுவது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ...


மலைகள் பள்ளத்தாக்குகளாய் மாறிப் போன குவாரிகளில் ... வார விடுமுறை தின மதிய உணவிற்குப் பின் தூங்குவதற்குப் பதிலாக ஒரு சிறிய உலா.

வழி நெடுக புழுதிக் காடு ... பயணிக்கவே கடினமானதாக உள்ள இடங்களில் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ...

கீழே இறங்க இரு வழிகள் உள்ளன. நாம் செல்கையில் ஒரு வழியில் நெருப்பிட்டுருந்தமையால் மற்றோர் வழியில் கீழே இறங்கினோம்.



இரு சக்கர வாகனத்தில் கீழே இறங்குகையில், வாகனத்தில் ஏதேனும் பழுதுப் பட்டால் பெரும் திண்டாட்டம் ஆகிவிடும்.

மேலும் இந்த பள்ளத்தாக்கு சுமார் 300 அடிக்கும் மேல் ஆழம் இருக்கலாம் ஆதலால் தேவைற்ற வீர சாகசங்களைத் தவிர்த்தல் நல்லது.

ஆகையால் நாம், இரு சக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு நடை பயணமாக கீழே இறங்கினோம்.








சென்னைக்குள் மலையேற்ற நடைப்பயிற்சிக்கும், நீச்சலுக்கும் இங்கு முயற்சி செய்யலாம்.







பாறைகளிலிருந்து வழியும் நீர் ஊற்று ....



கண்களுக்கும் மனதிற்கும் ரம்மியமாக காட்சியளிக்கும் மலைகளில் ஆங்காகே தேன் கூடுகள், வட்டமிடும் வல்லூறுகள் ... புறாக்கள் ....








சென்னை நகர நெரிசலில் நித்தமும் பயணிப்பவர்கள் என்றேனும் ஒரு விடுமுறை நாளில் இங்கு பயணிக்கலாம்.