Saturday, July 7, 2018

கடலில் நண்பர்களோடு (கோவளம்) - Kovalam Chennai

வாரவிடுமுறையில் முதலில் சதுரங்கப்பட்டினம் பார்த்துவிட்டு அப்படியே ... கடற்கரை / கடலில் ஓர் பயணம் நண்பர்களோடு ...

சதுரங்கப்பட்டினம் குறித்து நமது பதிவு: சதுரங்கப்பட்டினம் - Sadras

சதுரங்கப்பட்டினம் அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் காத்தாங்கடையில் ஒரு சிறிய கடையில் மதிய உணவு ... நாம் அசைவம் உண்ணாவிட்டாலும் .. அங்கு வறுத்த மீனும், அவித்த முட்டையும் சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் மட்டுமல்ல அந்த வாசனையே நமக்கு உணர்திற்று. 




நன்றாக உண்டப்பின் மீண்டும் கோவளம் நோக்கி ஓர் பயணம். கோவளத்தில் Off Road Sports ல் (http://www.offroadecr.com/) மணலில் பயணிக்கும் வாகனங்களில் ஒரு உலா ... 




பிறகு கட்டுமரத்தில் கடலை நோக்கி .... உயிர்காக்கும் உடையோடு அனைவரும் ... நமக்கு கடப்பாறை நீச்சல் மட்டுமே தெரியுமென்பதால் சற்று படபடப்பாகவே. கடற்கரை தொலைவாக தெரியும் தூரம் பயணித்தப்பின் ... கடலில் குதிக்க அறிவுறுத்தினர் ... நீச்சல் நன்கு தெரிந்த ஒரு நண்பரை குதிக்கவிட்டு பின்பு குதித்தோம் ... ஆஹா உணர்வுகளை விளிக்க வார்த்தைகளில்லை ... கடலில் மிதக்கின்றோம் ... மிதக்கின்றோம் ....

மலை உச்சியில் மழையில் நனைந்தாயிற்று (குடகு மலை), ஆகாயகங்கை அருவியில் குளித்தாயிற்று (கொல்லிமலை), கடலில் மிதந்தாயிற்று .. தண்ணீரின் மீதான பிரமிப்பும் ... ஆர்வமும் .. தொடர்ந்துக்கொண்டே ...


சென்னையில் இருப்போரும் சென்னைக்கு வருவோரும் அவசியம் ஒரு முறை இங்கு வந்து மிதக்கலாம்.


No comments:

Post a Comment