வரலாறு
கல்பாக்கம் அடுத்துள்ள சதுரங்கப்பட்டினம் ... கடற்கரை அருகில்... கி.பி., 17ம் நுாற்றாண்டை சேர்ந்த ... "டச்சுக்கோட்டை"
டச்சுக்காரர்கள் என்று அழைக்கப்படும் நெதர்லாந்து நாட்டு வணிகர்கள், 400 ஆண்டுகளுக்கு முன், இங்கு குடியேறி, ஆடை, நறுமண பொருட்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டனர்.இங்கேயே நிரந்தரமாக வசித்து, வர்த்தகத்தில் ஈடுபட கருதி, செங்கற்களாலான கோட்டையை அமைத்தனர். சில நுாற்றாண்டுகள் வசித்து, ஏற்றுமதி வர்த்தகத்தில் செழித்தனர்.
இந்நிலையில், ஆங்கிலேய படையினர், 1796ல், இக்கோட்டையை அழிக்க, கடற்பகுதி வழியே குண்டு வீசினர். அதை எதிர்த்து போராடிய டச்சுக்காரர்கள், 1818ல் ஆங்கிலேயே படையிடம் வீழ்ந்தனர். அதன் பின் கோட்டை அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், வசிப்பிட அறைகள், சமையற்கூடம், உணவு உண்ணும் அறை, நடன கூடம், பார்வை மாடம், தானிய கிடங்குகள், சுரங்க அறை, வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் என, இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.சுவர், தரை, மேற்கூரை, உறுதியான செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, நுழைவாயிலில் பீரங்கி, நாற்புற சுற்றுச்சுவர் என, பாதுகாப்பும் இருந்தது.
இங்கு பயன்படுத்தப்பட்ட, சீனா, ஜெர்மன் நாட்டு சுடுமண் பாத்திரங்கள், புகைக்கும் குழாய், பீங்கான் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி., 1620 - கி.பி., 1769க்கு இடைப்பட்ட காலத்தில் வசித்து இறந்தோர் கல்லறைகள், தற்போதும் உள்ளன.கோட்டை சுற்றுச்சுவர், இடிபாடுகள் மட்டுமே உள்ளது. வசிப்பிட அறை, தானிய கிடங்கை, தொல்லியல் துறை புதுப்பித்து கட்டியுள்ளது.
Courtesy: AARDE Foundation, Chennai
சதுரங்கபட்டினம் குறித்த விரிவான ஆய்வு கட்டுரைகளுக்கு: http://aarde.in/sadras
No comments:
Post a Comment