Showing posts with label நீர்நிலைகள் - Waterbodies. Show all posts
Showing posts with label நீர்நிலைகள் - Waterbodies. Show all posts

Sunday, January 1, 2023

ஏலகிரி - Yelagiri

புத்தாண்டை வரவேற்க வழக்கம் போல் கடைசி நிமிட திட்டமிடல் இம்முறை ஏலகிரி கூடார அனுபவத்திற்கு!

 ஏலகிரி குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

    ஏலகிரி - Yelagiri (2013) 


நண்பர்களின் குடும்பத்துடன் சென்னையிலிருந்து ஏலகிரிக்கு காரில்  சென்றடைந்தோம். மதிய உணவை உண்ட பின்பு ஏரி பூங்கா, கடைவீதி என ஒரு சுற்று வந்தப்பின் கூடார முகாமிற்கு சென்றோம்.

நல்ல புல்வெளி, திறந்தவெளி திரை, ஒலிபெருக்கிகள், மின்விளக்குகள், தொலை நோக்கி என குதூகலமான சூழல் !!!





மாலைக்கு பின்பு பனி பெய்ய ஆரம்பித்து நேரமாக அதுவே மழைப் போல பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது (வெப்பநிலை தோராயமாக 13°C - 14°C இருக்கலாம்.) பார்பெக்யூ வில் வெந்தது வேகாதது என வயிற்றுக்குள் கொஞ்சம் தள்ளி ... 



இரவு உணவை உண்டபின்பு குளிர் தாங்க முடியாமல் கூடாரத்திற்குள் அடைந்து கொண்டோம்  ... நள்ளிரவு 12 மணி நெருங்கும் வேலையில் மீண்டும் வெளியில் வந்து ஒரு ஆட்டம் பாட்டம் ... சில நிமிடங்களில் மீண்டும் கூடாரத்திற்குள்!!!

எங்களை போல நிறைய பேர் வித்யாசமான அனுபவத்திற்காக வந்திருந்ததால் கூட்டம் சற்று அதிகமாகவே .. படுக்கை விரிப்புகள், தலையணை என கொஞ்சம் பற்றாக்குறை வேறு ... தாங்கமுடியாத குளிரில்!!!

என்னுடைய நண்பர்கள் என்னை பார்த்த விதம்!


காலையில் ஒரு சிறு நடை காட்டு வெளியில் ... பின்பு காலை உணவிற்கு பிறகு ஏரி பூங்காவிற்கு கிளம்பினோம். சிறார்கள் விளையாட சிறிது நேரம் செலவிட்ட பின்பு .. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சென்று ஒரு குளியலை போட்டு விட்டு சென்னை திரும்பினோம்!


கொட்டும் பனியில் விண்மீன்களுடன் கூடாரத்தில் ஓர் இரவு ... புத்தாண்டை வரவேற்க, பார்ப்போம் இந்த ஆண்டு எவ்வாறு பயணிக்கிறது என்று !!!

Friday, April 19, 2019

வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி) - Veeranam Lake

இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போல அல்லாமல், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் ஒரு அற்புத ஏரி ஆகும். வீர நாராயண ஏரி கி.மு. 907-955  முதலாம்  சோழா்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாக நம்பப்படுகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது.

வருடத்தின் பெரும்பகுதி இந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது. கல்கி எழுதிய  "பொன்னியின் செல்வன்" புத்தகத்தின் தொடக்க அத்தியாயம் வீர நாராயண ஏரியின் கரையில் அமைந்துள்ள  ஏரியின் அம்சங்களை விரிவாக விவரிக்கிறது மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன.

ஏரியா? சமுத்திரமா? என வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஏரி ... எவ்வித நவீன உபகரணங்களும் இல்லாமல் அக்காலத்தில் இத்துனை பெரிய ஏரி வெட்டிய மனிதர்களையும், காலத்தையும் எண்ணிக்கொண்டே சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டு!

காலம் தான் எத்தனை ஆச்சர்யங்களை கடந்துள்ளது!