இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போல அல்லாமல், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் ஒரு அற்புத ஏரி ஆகும். வீர நாராயண ஏரி கி.மு. 907-955 முதலாம் சோழா்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாக நம்பப்படுகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.
காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது.
வருடத்தின் பெரும்பகுதி இந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது. கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" புத்தகத்தின் தொடக்க அத்தியாயம் வீர நாராயண ஏரியின் கரையில் அமைந்துள்ள ஏரியின் அம்சங்களை விரிவாக விவரிக்கிறது மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன.
ஏரியா? சமுத்திரமா? என வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஏரி ... எவ்வித நவீன உபகரணங்களும் இல்லாமல் அக்காலத்தில் இத்துனை பெரிய ஏரி வெட்டிய மனிதர்களையும், காலத்தையும் எண்ணிக்கொண்டே சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டு!
காலம் தான் எத்தனை ஆச்சர்யங்களை கடந்துள்ளது!
No comments:
Post a Comment