பலாப் பழம், சீதாப் பழம், கொம்புத்தேன் மற்றும் மலைத்தேன் கிடைக்கிறது.
அதனாவூர் ஏரியில் படகு சவாரி உண்டு. அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. இன்னும் அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் உண்டு.
இங்கு மலையேற்றம் உங்களுக்கு சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன.
கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் கழுகு பார்வையில் பார்த்து மகிழலாம்.
1. புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. உள்ளதிலேயே நீளமான பாதையாகும்.
2. புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் உள்ளது. இது பலராலும் விரும்பப்படும் பாதையாகும். இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.
3. மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் 2 கி.மீ. தூரப்பாதை,
4. தகவல் மையத்திலிருந்து கூசிக் குட்டை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.
5. புதூரிலிருந்து பெருமாடு நீர்வீழ்ச்சி செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
6. படகு வீட்டில் இருந்து புளிச்ச குட்டை செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
7. நிலாவூரிளிருந்து கரடிமுனை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.
நங்கள் மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் பாதையில் மலையேறினோம்.
(Courtesy: Google Maps)
காட்டுத்தீ ஏற்படாமலிருக்க கிராம மக்களே சில பகுதிகளைத் தீ வைத்திருந்தனர். தீயில் ஒரு மரம் முறிந்து மின்சாரக் கம்பியில் விழுந்திருந்தது. இதனால் நடைப்பயணம் பாதியிலே முடிவுற்று!
No comments:
Post a Comment