Sunday, March 17, 2013

வேலூர் கோட்டை - Vellore Fort

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை. இது 16 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 16 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சிசெய்த விஜயநகர வம்சத்தைச் சார்ந்த சின்ன பொம்மி நாயக்கர் என்னும் மன்னரால் இது கட்டப்பட்டது. 1650 - ஆம் ஆண்டில் பிஜப்பூர் சுல்தானும், 1676 - இல் மராட்டியரும், 1708 - இல் தில்லியின் தௌலத்கானும் கைப்பற்றினர். பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பிலும் இருந்தது. கி.பி. 1760 - ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் சென்றது.

இந்தக் கோட்டை தரையில் கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்களுள் இந்திய அளவில் சிறப்புப் பெற்றது. இதைச் சுற்றி ஆழமான அகழி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான முதலைகள் வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அகழி 190 அடி அகலமும், 20 அடி ஆழமும் உடையது. அகழியை அடுத்து இரண்டு அடுக்கு கோட்டைச்சுவர் உள்ளது. முதல் கோட்டைச்சுவர் மற்ற கோட்டைச் சுவர்களைவிட உயரம் குறைந்ததாக உள்ளது. இடை இடையே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் 30 அடிகள்.

விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

மைசூரை ஆண்ட திப்புசுல்தானை வென்ற பிறகு அவரது மகன்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.

1806 - ஆம் ஆண்டு இந்தியச் சிப்பாய்கள் கலகம் நடந்தபோது இங்கிருந்த சிப்பாய்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் கலகம் செய்தனர். கலகத்தில் ஈடுபட்ட 95 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இன்றளவும் இங்கு உள்ளது.

இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு மசூதியும், இந்து கோவிலும், கிறிஸ்தவ ஆலயமும் உள்ளன. தமிழக காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றும், இந்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகமும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோட்டை கி.பி. 1921 - ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Vellore Fort is a large 16th-century fort situated in Vellore city, in the state of Tamil Nadu, India built by Vijayanagara Kings. The Fort was at one point of time the headquarters of the Aravidu Dynasty of Vijayanagara Empire. The fort is known for its grand ramparts, wide moat and robust masonry.

The Fort's ownership passed from Vijayanagara Kings, to the Bijapur Sultans, to Marathas, to the Carnatic Nawabs and finally to the British, who held the fort until India gained independence. The Indian government maintains the Fort with the Archaeological Department. During British rule, the Tipu Sultan's family and the last king of Sri Lanka, Sri Vikrama Rajasinha were held in as prisoners in the fort. The fort houses a Christian church, a Muslim mosque and a Hindu temple, the latter of which is famous for its magnificent carvings. The first rebellion against British rule erupted at this fort in 1806, and it is also a witness to the massacre of the Vijayanagara royal family of Sriranga Raya.

Vellore Fort Map (Courtesy: Google Maps)


Vellore Fort Map (1806)


 கோட்டைச்சுவர்






ஜலகண்டேஸ்வர் கோவில்



தமிழ் எழுத்துக்கள் (பல்வேறு காலங்களில்)


No comments:

Post a Comment