Thursday, November 27, 2014

கோவைக் குற்றாலம் - Kovai Kutralam

கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது




தொங்குப் பாலம்








மருதமலை - Marutha Malai

கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.





1 comment:

  1. Very nice pictures. Thanks for sharing. A popular tourist draw in Coimbatore, it comes under the Siruvani mountain range. Located on the Western Ghats, the cascading waterfalls form a picture perfect backdrop for spending some wonderful time with your loved ones in nature's lap. Explore more about Kovai Kutralam.

    ReplyDelete