Sunday, December 3, 2017

புலிக்குகை (மாமல்லபுரம்) - Tiger Cave (Mahabalipuram)


மாமல்லபுரம் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

மாமல்லபுரம் 1 (2012)

புலிக்குகை ஒரு முன்னுரை

மாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு. எத்தனையோ விளக்கங்களை இதுவரை பெற்றுள்ள இப்புதுமைச் சின்னம், சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக் கோயில் என்பதையும் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பிற உயிர்களையும் கண்ணன் காத்த கிருஷ்ண மண்டபச் சிற்பத்தொகுதி, சங்க இலக்கிய முல்லைத் திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம். (Dynamic Sculpture)

~ "புலிக்குகையும், கிருஷ்ண மண்டபமும்" நூலிலிருந்து
சா.பாலுசாமி (ஆசிரியர்)




புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோயில் வளாகம் மாமல்லபுரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வாயிலில் புலித்தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.








பல்லவர் காலத்தில் 8ம் நூற்றாண்டில் இவை வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடற்கரையை ஒட்டியே தனிமையான சூழலை கொண்டிருப்பதால் முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த கோயில் வளாகம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.










No comments:

Post a Comment