Saturday, December 16, 2017

திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் - Thirupalaivanam Thirupaleeshwarar Temple

பாடல் பெற்ற சிவாலயங்களில் திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் ஆலயமும் ஓன்று! திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவேற்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.

அழகும், புராதன வரலாறும் கொண்ட இத்திருத்தலத்திற்கு நமது பயணம் இரு சக்கர வாகனத்தில்!

தலபுராணம்

வடபுலம் வென்ற முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள்,  அடர்ந்த பாலை மரங்கள் நிறைந்த கடற்கரையை ஒட்டி இருந்த காட்டின் வழியே  சென்று கொண்டிருந்தன. படைகளை ஓய்வெடுக்க கட்டளையிட்ட அரசன் தன் பட்டத்து யானையை அருகில் இருந்த பாலை மரத்தில் கட்டச் சொல்ல அந்த மிகப் பெரிய அழகிய பட்டத்து யானை மூர்ச்சையாகி கீழே விழுந்தது. அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்கு தோன்றவே,அவன்  அவன் மரத்தை வெட்ட பணித்தான். மரத்தை கோடரியால் வெட்ட வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வரவே அதிர்ச்சியும் பயமும் கொண்டு அந்த இடத்தை ஆராய்ந்தபோது தலையில் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் தென்படவே மனம் நொந்த அரசன் தன்னுடைய செயலுக்கு வருந்தி இறைவர்க்கு மிகப்பெரிய அழகான கோயிலை கட்டுவித்தான்.







ஆனைக் கோயில் (கஜபிரஸ்தா)

கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று.

திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப்பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள்.






















இத்திருத்தலத்தில்  ஆவுடையார் கல்லிலும், இலிங்கம் மரத்திலும் இருப்பது தனிச் சிறப்பு. (குறிப்பு: இலிங்கத்தில் கோடாரிப்பட்டத் தழும்பு இன்றும் காணப்படுகிறது.)

மேலும் விபரங்களுக்கு: அருள்மிகு திருப்பாலீஸ்வரர் திருக்கோயில்

No comments:

Post a Comment