Saturday, November 11, 2017

நாகலாபுரம் நீர்வீழ்ச்சி - Nagalapuram Water Falls

தனியாகவோ, கூட்டமாகவோ தொலைந்து போகலாம் பாதையை சரியாக கணிக்க விட்டால். நாங்களும் (7 நண்பர்கள்) பாதையை தவறவிட்டு அடர்த்தியான காடுகளுக்கிடையே, முற்செடிகளோடு போராடி நாகலாபுரம் நீர்வீழ்ச்சியை அடைந்த ஒரு சவால் பயணம்.

வார விடுமுறையை கழிக்க நண்பர்களோடு நாகலாபுரம் நீர்வீழ்ச்சி நோக்கி காலை 7.30 மணியளவில் சென்னையிலிருந்து கிளம்பினோம். நாங்கள் பூந்தமல்லி, திருவள்ளூர் வழியே நாகலாபுரம் நோக்கி பயணித்தோம்.

திருவள்ளூரில் சூடான தேநீரோடு, பயணிக்க ஏற்ற தருணமாய் இதமான தட்பவெப்ப நிலை!

ஊத்துக்கோட்டையை தாண்டியப்பின் .. சாலையோர மரத்தடியில் எங்களது வண்டியை நிறுத்திவிட்டு, காலை உணவை பசுமையான வயல்களை பார்த்தவாறு உண்டோம். தமிழக சாலையோரங்கள் பெரும்பாலும் தற்பொழுது மனைகளாக மாறி வரும் அதே வேளையில் ஆந்திர சாலையோரங்கள் வயல்களாகவே ...


குறிப்பு: நாகலாபுரம் நீர்வீழ்ச்சியில் கடைகள் ஏதுமில்லை, உங்களது உணவு மற்றும் திண்பண்டங்களை நீங்கள் கொண்டு செல்லலாம் அல்லது அங்கு சென்று சமைக்கலாம்.. காட்டை மாசுபடுத்தாமலிருக்க நமது உணவை பாலீத்தின் அல்லாத பாத்திரங்களில் நாமே கொண்டு செல்வது சாலச் சிறந்தது.

காலை உணவை முடித்து விட்டு நாகலாபுரம் அருவி வாகன நிறுத்துமிடம் நோக்கி பயணித்தோம்.

வாகனத்தை நிறுத்திவிட்டு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு நடக்கலானோம்.

முதலில் வரும் தடுப்பு அணையைக் கடந்து காட்டு வழியில் நடக்க வேண்டும்.





மீன்களைப் பிடிக்க பயன்படுத்தப்படும் மூங்கில் கூடுகள்




அணையைக் கடந்து ...


இங்கு நாம் வழி தவறலாம், வழி தவறினாலும் சற்று தூரம் சுற்றி மீண்டும் சரியான பாதைக்கு வந்து விடலாம்.



பிறகு ஒரு சிற்றோடையைக் (மழைக் காலங்களில் மட்டும் நீரோடும், தற்சமயம் வறண்டு) கடந்து நடக்க வேண்டும்,




இங்கு நாங்கள் பாதையை தவறவிட்டு அடர்த்தியான காடுகளுக்கிடையே, முற்செடிகளோடு போராடி ...



மீண்டும் சரியான பாதையை அடைந்தோம்.



நீரோடையை கண்டப் பின், நாம் நமது இடது புறம் நீரோடை இருக்குமாறு நடக்க வேண்டும், இது முதல் இரண்டு பெரிய அருவிகளை அடையும் வரை.






தெளிந்த நீரில் தெரியும் கூழாங்கற்கள், நீரோ மிகக் குளிர்ச்சியாய் ...




வழி தெரியாமல் ஒரு மலை முகட்டினை அடைந்தபொழுது ..



மீண்டும் கீழே இறங்கி .. சரியான பாதையில்...


முதல் அருவி


2வது அருவி செல்ல, இது போன்ற சற்று கடினமான பாதைகளை கடக்க வேண்டும்.




2வது அருவி



3வது அருவி செல்லும் வழியும் சற்று கடினமானதாகவே ...



இரண்டாவது அருவிக்கும் மூன்றாவது அருவிக்கும் இடையில் ஓடையயை கடந்து நமக்கு வலது புறம் ஓடை இருக்குமாறு நடக்க வேண்டும்.




மொத்தம் 5 பெரிய அருவிகள் இருக்கிறது, எங்களது நண்பர்கள் குழு 3 வது அருவிக்கு மேலே செல்ல விரும்பாததால் ... அருவியில் நன்றாக களைப்பு நீங்க குளித்தோம்

1000 முறை பாத்ரூம் ஷவரில் குளித்தாலும் ஒரு அருவி குளியலுக்கு ஈடு ஆகா.

3வது அருவி


கொண்டு சென்ற உணவை உண்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். பிறகு மெல்ல இறங்க ஆரம்பித்தோம். மாலைக்குள் வாகன நிறுத்துமிடத்தை அடைந்து விட்டோம்.

மீண்டும் சென்னை நோக்கி .. அதே அன்றாட பணிச் சக்கரத்தில் சிக்கிட!

இங்கு ஆழமும், பாறைகளும் அதிகம், ஆதலால் கவனம் தேவை.


No comments:

Post a Comment