Thursday, August 15, 2013

Coorg - கூர்க்

சென்னையிலிருந்து 3 நாட்கள் பயணமாக கூர்க்-கை நோக்கி, நண்பர்களோடு புகைவண்டியில் பயணம். 

மைசூர் சந்திப்பு தான் கூர்கிற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். மைசூரிலிருந்து கூர்க் நோக்கி Van ல் பயணித்தோம். 

Mysore Railway Junction


Dubare - Cauvery Rafting

நீச்சல் தெரியாவிட்டாலும், இந்த River Rafting தான் இப்பயணத்தின் உச்சம் !!!

இங்கு காவேரியின் அகலம் குறைவு தான், ஆனால் நீரில் வேகம் அதிகம். இவ்வூரின் பசுமையைப் பார்க்கையில் ஏனோ ஏக்கமாய்; உள்ளுக்குள் திருச்சியின் அகன்ற, வறண்டக் காவேரி கண்ணீராய் !!!!!

குறிஞ்சி நிலத்தில் விளையும் பயிர்களுக்குப் பதிலாய் நன்செய் பயிர்களாய் ... விவசாயத்திலும் அரசியல் ... ????!!!!

Dubare is known for its elephant camp, and is a forest camp on the banks of the river Kaveri in the district of Kodagu, Karnataka. It is an important base for the Karnataka Forest Department's elephants.

The elephants for the Mysore Dussehra were trained at Dubare elephant camp. At present, after logging operations have ceased, the elephants have been practically retired except for giving some rides to tourists.

In addition to elephant training camp, Nisargadhama and Veerabhoomi are the other main attractions of the forest area.

There are opportunities for trekking, elephant rides, fishing, and river rafting. these activities are hosted by Jungle Lodges and resorts. The Forest Department also conducts some treks along well-defined routes.

Coorg Cauvery Rafting has started river rafting in Dubare 15 kms from Kushalnagar.

From the month May to August -7 Kms floating white water rafting crossing 7 rapids.
Rest of the months – 30 Minutes 1.5 Kms still water rafting & Swimming provided with life jackets.



Raja's Seat

Raja's Seat (Seat of the King) is a seasonal garden of flowers and artificial fountains. It is one of the most important tourist spots in maidekeri of Coorg District. It is 270 km away from Bangalore, the capital of Karnataka.

A pleasant spectacle of refreshing layers of greenery, chain of high and low-rise-mountains attired with mist, the Raja Garden is one-time-favourites of Kings of Kodagu who used to watch the setting sun, and spend time with their queens here. The structure is small square in brick and mortar of four pillars bridged by arches, enhanced by beautiful surroundings. This lovely spot was a favourite place of recreation for the Rajas and hence was permanently associated with them. It is built on a high level ground with a commanding view of the cliffs and valleys to the west. Early in the morning as the sun is just rising in the east, the mist shrouded valley below offers a rare sight. The golden light of the setting sun is a splendor to watch. There is also an attraction of the Toy Train for children.


Bhagamandala Temple

It is a common practice for pilgrims to take a dip in the triveni sangama and perform rituals to their ancestors before proceeding to Talakaveri, the birthplace of Kaveri. During Tula Sankramana which falls on October 17 or 18th, pilgrims assemble here in large numbers.

A short distance from the triveni sangama, there is a famous temple known as Sri Bhagandeshwara temple, where Bhagandeshwara (Ishwara), Subramanya, Mahavishnu and Ganapati idols are installed. This place is also known as Bhagandeshwara Kshetra, from which the name Bhagamandala is derived. The temples in this area are built in Karavali(West Coast) style.



தலக் காவேரி / Talakaveri

புண்ணிய பூமி ... பொன்னியின் பிறப்பிடம் ... வருடந்தோறும் தஞ்சை இருகரை புரள காவேரி அன்னை பாதம் பதிக்க வேண்டுவதைத் தவிர நமக்கு மனதில் வேறொன்றும் எழவில்லை !!!

Talakaveri is the place that is generally considered to be the source of the river Kaveri. It is located by Brahmagiri hill near Bhagamandala in Kodagu district, Karnataka, 1,276 m. above sea level.






மலை உச்சியில் மழையில் நனைந்து பாருங்கள் ... மழையில் கறைந்து போவீர்கள் ... என் வாழ்நாளில் என்னை மறந்த சிலத் தருணங்களில் இதுவும் ஒன்று !!!!!



Abbey Falls   

About 8 Kms from Madikeri is the beautiful waterfall and picnic spot, where the Abbey cascades 70 ft down to flow as a small river. A path through coffee and cardamom plantation off the main road adds to the attraction of the perennial waterfall. Enjoy the gushing, roaring beauty but a desire to take a dip in the cool waters may prove to be risky.



Raja's tomb / Gaddige   

Gaddige or the tombs of Virarajendra and Lingarajendra at Madikeri is one of the important monuments of Coorg. The royal tombs on a hillock to the north of Madikeri provides a commanding view of the town. Lingarajendra's tomb was built in 1820. There are also the tombs of a Raja's priest and that of two army commanders. A commemorative plaque, eulogizing the bravery of General Biddanda Bopu who fought.

Tipu Sultan has been recorded by Dodda Veerarajendra in an inscription. The tombs are in the style of Muhammadan edifices with domes in the center and turrets at the angles. The bars of windows made of brass have fine engravings. 





Omkareshwara Temple

This temple built by Lingaraja in 1820 is a perfect blend of Islamic and Gothic styles of architecture. The temple is dedicated to Lord Siva, and the Siva Linga brought from Kashi (Varanasi) has been installed here.





Bylakuppe / Namdroling Monastery (Golden Temple) 

திபெத்தியர்களுக்கான இவ்விடத்தை பார்க்கையில் ஈழத்துத்  தமிழர்களை ஏன் புறந்தள்ளியது இந்திய அரசு, எமக்கு புரியாத அரசியல் ????!!!!!

Bylakuppe is home to two of the many Tibetian settlements in India, established by Lugsum Samdupling (in 1961) and Dickyi Larsoe (in 1969). It is located to the west of the Mysore district in the Indian state of Karnataka. The twin town Kushalanagara is about 6 kilometers from Bylakuppe.











Krishna Raja Sagara / Brindavan Gardens.

Krishna Raja Sagara, also popularly known as KRS, is the name of both a lake and the dam that creates it. It is located close to the settlement of Krishnarajasagara. The dam is across Kaveri River, in Mandya District near Mysore in Karnataka state, India. There is an ornamental garden attached to the dam, called Brindavan Gardens.

Dam

The dam was built across river Kaveri, the life giving river for the Mysore and Mandya districts, in 1924. Apart from being the main source of water for irrigation in the most fertile Mysore and Mandya, the reservoir is the main source of drinking water for all of Mysore city and almost the whole of Bangalore city, the capital of the state of Karnataka. The water released from this dam is further used as an important source of water in the state of Tamil Nadu, which has its own Mettur dam in the Salem district. Sir Mokshagundam Visvesvarayya served as the chief engineer during the construction of this dam. The dam is named for the then ruler of the Mysore Kingdom, Krishnaraja Wodeyar IV.

Brindavan Gardens

The Brindavan Gardens is a show garden that has a botanical park, with fountains, as well as boat rides beneath the dam. Diwans of Mysore planned and built the gardens in connection with the construction of the dam. KRS Dam was the first to install automated Crest gates during 1920 which was initiated by Sir. M V. Display items include a musical fountain. Various biological research departments are housed here. There is a guest house, and a four star luxury heritage hotel Royal Orchid for tourists.




Sunday, March 17, 2013

வேலூர் கோட்டை - Vellore Fort

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை. இது 16 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 16 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சிசெய்த விஜயநகர வம்சத்தைச் சார்ந்த சின்ன பொம்மி நாயக்கர் என்னும் மன்னரால் இது கட்டப்பட்டது. 1650 - ஆம் ஆண்டில் பிஜப்பூர் சுல்தானும், 1676 - இல் மராட்டியரும், 1708 - இல் தில்லியின் தௌலத்கானும் கைப்பற்றினர். பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பிலும் இருந்தது. கி.பி. 1760 - ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் சென்றது.

இந்தக் கோட்டை தரையில் கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்களுள் இந்திய அளவில் சிறப்புப் பெற்றது. இதைச் சுற்றி ஆழமான அகழி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான முதலைகள் வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அகழி 190 அடி அகலமும், 20 அடி ஆழமும் உடையது. அகழியை அடுத்து இரண்டு அடுக்கு கோட்டைச்சுவர் உள்ளது. முதல் கோட்டைச்சுவர் மற்ற கோட்டைச் சுவர்களைவிட உயரம் குறைந்ததாக உள்ளது. இடை இடையே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் 30 அடிகள்.

விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

மைசூரை ஆண்ட திப்புசுல்தானை வென்ற பிறகு அவரது மகன்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.

1806 - ஆம் ஆண்டு இந்தியச் சிப்பாய்கள் கலகம் நடந்தபோது இங்கிருந்த சிப்பாய்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் கலகம் செய்தனர். கலகத்தில் ஈடுபட்ட 95 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இன்றளவும் இங்கு உள்ளது.

இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு மசூதியும், இந்து கோவிலும், கிறிஸ்தவ ஆலயமும் உள்ளன. தமிழக காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றும், இந்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகமும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோட்டை கி.பி. 1921 - ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Vellore Fort is a large 16th-century fort situated in Vellore city, in the state of Tamil Nadu, India built by Vijayanagara Kings. The Fort was at one point of time the headquarters of the Aravidu Dynasty of Vijayanagara Empire. The fort is known for its grand ramparts, wide moat and robust masonry.

The Fort's ownership passed from Vijayanagara Kings, to the Bijapur Sultans, to Marathas, to the Carnatic Nawabs and finally to the British, who held the fort until India gained independence. The Indian government maintains the Fort with the Archaeological Department. During British rule, the Tipu Sultan's family and the last king of Sri Lanka, Sri Vikrama Rajasinha were held in as prisoners in the fort. The fort houses a Christian church, a Muslim mosque and a Hindu temple, the latter of which is famous for its magnificent carvings. The first rebellion against British rule erupted at this fort in 1806, and it is also a witness to the massacre of the Vijayanagara royal family of Sriranga Raya.

Vellore Fort Map (Courtesy: Google Maps)


Vellore Fort Map (1806)


 கோட்டைச்சுவர்






ஜலகண்டேஸ்வர் கோவில்



தமிழ் எழுத்துக்கள் (பல்வேறு காலங்களில்)


Saturday, March 16, 2013

ஏலகிரி - Yelagiri

கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய பச்சைக்கம்பளப் பகுதி, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது மலை. படகு துறை இருக்கிறது. அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கிறது. ஒவ்வொரு வளைவிற்கும் கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி, பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.

பலாப் பழம், சீதாப் பழம், கொம்புத்தேன் மற்றும் மலைத்தேன் கிடைக்கிறது.

அதனாவூர் ஏரியில் படகு சவாரி உண்டு. அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. இன்னும் அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் உண்டு.




இங்கு மலையேற்றம் உங்களுக்கு சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன.

கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் கழுகு பார்வையில் பார்த்து மகிழலாம்.

1. புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. உள்ளதிலேயே நீளமான பாதையாகும்.
2. புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் உள்ளது. இது பலராலும் விரும்பப்படும் பாதையாகும். இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.  
3. மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் 2 கி.மீ. தூரப்பாதை,
4. தகவல் மையத்திலிருந்து கூசிக் குட்டை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.
5. புதூரிலிருந்து பெருமாடு நீர்வீழ்ச்சி செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
6. படகு வீட்டில் இருந்து புளிச்ச குட்டை செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
7. நிலாவூரிளிருந்து கரடிமுனை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.

நங்கள் மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் பாதையில் மலையேறினோம்.

(Courtesy: Google Maps)









காட்டுத்தீ ஏற்படாமலிருக்க கிராம மக்களே சில பகுதிகளைத் தீ வைத்திருந்தனர். தீயில் ஒரு மரம் முறிந்து மின்சாரக் கம்பியில் விழுந்திருந்தது. இதனால் நடைப்பயணம் பாதியிலே முடிவுற்று!