Friday, April 19, 2019

வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி) - Veeranam Lake

இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போல அல்லாமல், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் ஒரு அற்புத ஏரி ஆகும். வீர நாராயண ஏரி கி.மு. 907-955  முதலாம்  சோழா்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாக நம்பப்படுகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது.

வருடத்தின் பெரும்பகுதி இந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது. கல்கி எழுதிய  "பொன்னியின் செல்வன்" புத்தகத்தின் தொடக்க அத்தியாயம் வீர நாராயண ஏரியின் கரையில் அமைந்துள்ள  ஏரியின் அம்சங்களை விரிவாக விவரிக்கிறது மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன.

ஏரியா? சமுத்திரமா? என வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஏரி ... எவ்வித நவீன உபகரணங்களும் இல்லாமல் அக்காலத்தில் இத்துனை பெரிய ஏரி வெட்டிய மனிதர்களையும், காலத்தையும் எண்ணிக்கொண்டே சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டு!

காலம் தான் எத்தனை ஆச்சர்யங்களை கடந்துள்ளது!

கங்கைகொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு. அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது.

தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது

கங்கைகொண்ட சோழபுரம்

1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது. அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.

கோயில் விமானம்

கோயில் விமானம் தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும். அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன. ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.

மண்டபம்

340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது. அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது. தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.

140 தூண்கள்

பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

















கீழணை - Lower Anaicut


கீழணை 1902 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய அரசால் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் கங்கைகொண்டசோழபுரத்தின் இடிபாடுகளில் இருந்த கற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலணையிலிருந்து 70 மைல் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 கி. மீ. தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. இதன் மதகுகள் கொள்ளிடம் ஆற்று நீரை பல்வேறு நீர்வழிகளில் பிரித்து விடுகின்றன. இவ்வணையிலிருந்து கொள்ளிடம் மண்ணியாறு மற்றும் உப்பணாறாகப் பிரிகிறது.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் சென்றடைகிறது.

Courtesy: Google Maps










வடவாறு

பூண்டி மாதா பேராலயம் - Poondi Madha Basilica

பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica) அல்லது பூண்டி மாதா கோவில் என்பது தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ பேராலயம் ஆகும். இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

வரலாறு

(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது. 1955 இல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார். அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியரால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999 இல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II என்பவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

திருச்சிலுவை

பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.







அப்பால ரங்கம், திருப்பேர்நகர் (கோவிலடி) - Appalarangam, Thirupper Nagar (Koviladi)

தலச்சிறப்பு : இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது.  108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும்.  ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் "திவ்ய தேசங்கள்" என்றும், "திருப்பதிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.  108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்" என்ற திருநாமம் ஏற்பட்டது.  இப்பெருமாளின் வலதுகையில் ஒரு  அப்பக்குடத்தை அணைத்தவண்ணம்  உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு  மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.

பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம்  செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை  உடைய திவ்ய தேசம், தற்போது "கோயிலடி" என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம்  செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது.  எனவே  இத்தலம் வந்து வழிபடுவோருக்கு "வைகுண்ட வாசம் நிச்சயம்" என்பது ஐதீகம்.  ஐந்து  ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும்  பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது.  இந்த பஞ்ச ரங்க தலங்கள்,  உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன.  அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள  தலங்களாகும்.

ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்),
அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் - திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) - திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

“அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும்.  ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும்,  ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது  என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது.  ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள்  இத்தலத்தில் எழுந்தருளியதால், "ஆதி ரங்கம்" என்னும் பொருள்பட "அப்பால ரங்கம்"  என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க  சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.  திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின்  மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.  தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள்.  தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.

இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.