பள்ளிக்கரணை ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைந்துள்ளது.
இங்கு பலவகையான பறவைகள் வெளி மாநிலங்களிலிருந்தும் (ஜூலை முதல் நவம்பர் வரை) வெளி நாடுகளிலிருந்தும் (டிசம்பர் முதல் ஜனவரி வரை) இனப்பெருக்கத்திற்காக வருகின்றன.
பல ஆயிரம்/இலட்சங்களில் செலவு செய்து வெளிநாடு சுற்றுலாக்களில் காணும் பூநாரைகள் (ஃபிளமிங்கோ) - Flamingos வகை பறவைகளை இங்கு சர்வ சாதாரணமாகக் காணலாம்.
இத்துனை சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலத்தினை குப்பைக்காடாக்கி இயற்கையை சீரழித்திக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.
கொக்கு
கூழக்கடா
நீர்காகம்
செந்நாரை
மைனா
எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய! தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Sunday, October 16, 2016
Saturday, October 1, 2016
பூரி ஜகநாதர் கோவில், கானாத்தூர் - Puri Jagannath Temple, Kanathur, Chennai
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள கானாத்தூரில் (ECR) பூரி ஜகநாதர் கோவில் அமைந்துள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற ஜகநாதர் கோவிலின் சிறிய மாதிரிக்கோவில் போல வடிவமைத்துள்ளனர். அழகிய சிற்பங்கள், வண்ணமயமான மலர்கள் என மிக அமைதியான, அழகானக் கோவில்.
தமிழகக்கோவில்களில் உள்ள சிற்பங்கள் போல் அல்லாமல், தட்டையான ஓவியங்கள் போல் இருக்கும் கடவுளின் தோற்றம் வித்யாசமாய் .... ஜகநாதர் (கிருஷ்ணன்), பலராமன் மற்றும் சுபத்திரையுடன் இருக்கும் இக்கோவில் ஒடிசா செல்ல இயலாதவர்களுக்கு வரப்பிரசாதமே!

Friday, August 26, 2016
பள்ளிக்கரணைத் தாமரைக்குளம் - Pallikaranai Lotus Pond
பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், அதுவும் போக்குக்குவரத்து நெரிசலுள்ள சாலைக்கருகில் பள்ளிக்கரணை தாமரைக்குளம். மாநகராட்சியால் நன்காகவே பராமரிக்கப்பட்டு வருகிறது.
வண்ண வண்ண மலர்கள், நல்ல இருக்கைகள், குழந்தைகள் விளையாட வசதி, பக்கச் சுவர்களில் ஓவியங்கள் ... குளத்தில் தாமரைகளும், வாத்துகளும் .... மனதிற்கினிய ஓர் சிறிய பூங்கா!
இதை விட மிக முக்கியமான, அரிதான நன்னீர் சதுப்பு நிலக்காட்டினை (பள்ளிக்கரணை) பாதுகாக்காமல் குப்பை மலையாய் வீணடித்து வருவது வருந்தத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)