பள்ளிக்கரணை ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைந்துள்ளது.
இங்கு பலவகையான பறவைகள் வெளி மாநிலங்களிலிருந்தும் (ஜூலை முதல் நவம்பர் வரை) வெளி நாடுகளிலிருந்தும் (டிசம்பர் முதல் ஜனவரி வரை) இனப்பெருக்கத்திற்காக வருகின்றன.
பல ஆயிரம்/இலட்சங்களில் செலவு செய்து வெளிநாடு சுற்றுலாக்களில் காணும் பூநாரைகள் (ஃபிளமிங்கோ) - Flamingos வகை பறவைகளை இங்கு சர்வ சாதாரணமாகக் காணலாம்.
இத்துனை சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலத்தினை குப்பைக்காடாக்கி இயற்கையை சீரழித்திக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.
கொக்கு
கூழக்கடா
நீர்காகம்
செந்நாரை
மைனா
No comments:
Post a Comment