இந்தியாவில் 1875-ம் ஆண்டில் தியோசோஃபிகல் சொசைட்டி அன்னி பெசன்ட் அம்மையாரால் 27 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. பின்னர் 270 ஏக்கர் நிலப்பரப்பான இந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் அந்தந்த மதத்திற்கு உரித்தான ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைப்பின் குறிக்கோள்கள்
1. இனம், மதம், பால், ஜாதி அல்லது வேறுபாடின்றி மனித உலகளாவிய அளவில் சகோதரத்துத்தை ஒரு மையக்கருவை வைத்து ஒரு சமுதாயம் உருவாக்குவதற்கு.
2. சமயம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒப்பீட்டு ஆய்வுகலைச் செய்து ஊக்குவிக்க.
3. இயற்கையின் விவரிக்க முடியாத சட்டங்கள் மற்றும் மனிதன் பொதிந்த அதிகாரங்களை அறிய முற்படுவது.
பசுமையான காடு, பாரம்பர்ய பழைய கட்டடங்கள், பலவிதமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் என நகருக்குள் பெரிய வனம்.
இங்குள்ள ஆலமரம் (அடையாறு ஆலமரம்) சுமார் 450 ஆண்டுகள் பழைமையானது. தாய் மரம் 1996 ல் விழுந்து விட்டதாகவும் ... மரத்தின் வேர்கள் சுமார் 60,000 ச.மீ பரந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துனை பெரிய ஆலமரத்தை பார்க்கையில் வியப்புகளை வார்த்தைகளில் அடக்க இயலா ... ஒரு முறை சென்று வியந்து வாருங்கள்!
மேலும் இங்கு நூலகம், பழைய குடியிருப்புக் கட்டடங்களும், அன்னி பெசன்ட் அம்மையாரின் கல்லறையும் அமைந்துள்ளது
இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த தியோசோஃபிகல் சொசைட்டி உலா ஓர் புதிய அனுபவமாக இருக்கும்.
அனுமதி இலவசம்.
பார்வையாளர் நேரம் (ஞாயிறு விடுமுறை)
காலை 8.30 மணி முதல் 10 வரை
மாலை 2 மணி முதல் 4 மணி வரை
மேலும் விபரங்களுக்கு: TS Adyar
நாம் அறிந்த வரையில் பொது மக்களுக்காக இரு வழிகள் உள்ளன. முதல் வழி ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை எதிரிலும், இரண்டாம் வழி பெசன்ட் அவென்யூ சாலையிலும் உள்ளது. மொத்த இடங்களையும் சுற்றி பார்க்க முதல் வழியும், அடையாறு ஆலமரத்தை வியக்க இரண்டாம் வழியும் ஏதுவாக இருக்கும்.
திறந்தவெளி அரங்கம்
சமூக உறுப்பு நாடுகளின் பெயர்கள் (52)
விதவிதமான கள்ளி செடிகள்
புத்தர் கோவில்
பல்வேறு வகையிலான தாவரங்கள்
கோவில் தூணில் ... சிற்பங்கள்
பழந்தின்னி வௌவால்கள்
அடையாறு ஆலமரம்
No comments:
Post a Comment