Thursday, August 16, 2018

மேலணை / முக்கொம்பு அணை (Upper Anaicut / Mukkombu Dam)


தென்மேற்கு மழையின் தீவிரத்தால் கர்நாடகா திறந்தவிட்ட அபரிதமான நீரால் ... கரைபுரளும்  காவிரியைக் காண முக்கொம்பு நோக்கி ...

மேலணை:

திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணை. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன.

காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசணப் பகுதி பொறியாளராக 1829 இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846 இல் அணையின்மீது பால உள்ளிட்டவை கட்டப்பட்டன.

இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.

மேட்டூர் அணையில் இருந்து 177 கீலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.





தென் எல்லையைத் தவிர பரதக் கண்டத்தை ஆண்ட பெரும்பாலான பேரரசுகள் (முக்கிய காரணங்களுள் காவிரியும் ஓன்று)

ஒரு துளி மழைக் கூட இங்கு இல்லாமல் கடல்போல ஆர்ப்பரிக்கும் காவிரி ... இதுவரை இப்படிக் கண்டதில்லை ....







கொள்ளிடம், காவிரி பிரியும் மையப் பகுதியிலும், காவிரி தென்கரையிலும் பூங்கா உள்ளது.

கல்லணைக் கட்டிய "கரிகாலச் சோழன்"


மேலணைக் கட்டிய "ஆர்தர் காட்டன்"



சிறுவர்களை கவரும் வகையிலான குப்பைத்தொட்டிகள்





தமிழக-கேரள மலைத்தொடர்களின் மாதிரி






காற்றின் வேகத்தால் நீரின் ஆர்ப்பரிப்பு, முகத்தில் தெறிக்கும் சாரல் ... பிரமிப்பும், ஒரு வித நடுக்கமும் ... மேலணை பாலத்தில் நடக்கையில்!!!



























அணை மற்றும் பூங்கா ... போதிய பராமரிப்பு அல்ல ... பராமரிப்பே இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது!


Saturday, August 4, 2018

தியோசோஃபிகல் சொசைட்டி - Theosophical Society


சென்னையில் பலரும் கேள்விப்படாத இடம்தான், இந்த தியோசோஃபிகல் சொசைட்டி (Theosophical society) பிரம்மஞான சபை.

இந்தியாவில் 1875-ம் ஆண்டில் தியோசோஃபிகல் சொசைட்டி அன்னி பெசன்ட் அம்மையாரால் 27 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது.  பின்னர் 270 ஏக்கர் நிலப்பரப்பான இந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் அந்தந்த மதத்திற்கு உரித்தான ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைப்பின் குறிக்கோள்கள்

1. இனம், மதம், பால், ஜாதி அல்லது வேறுபாடின்றி மனித உலகளாவிய அளவில் சகோதரத்துத்தை ஒரு மையக்கருவை வைத்து ஒரு சமுதாயம் உருவாக்குவதற்கு.
2. சமயம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒப்பீட்டு ஆய்வுகலைச் செய்து ஊக்குவிக்க.
3. இயற்கையின் விவரிக்க முடியாத சட்டங்கள் மற்றும் மனிதன் பொதிந்த அதிகாரங்களை அறிய முற்படுவது.

பசுமையான காடு, பாரம்பர்ய பழைய கட்டடங்கள், பலவிதமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் என நகருக்குள் பெரிய வனம்.

இங்குள்ள ஆலமரம் (அடையாறு ஆலமரம்) சுமார் 450 ஆண்டுகள் பழைமையானது. தாய் மரம் 1996 ல் விழுந்து விட்டதாகவும் ... மரத்தின் வேர்கள் சுமார் 60,000 ச.மீ பரந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துனை பெரிய ஆலமரத்தை பார்க்கையில் வியப்புகளை வார்த்தைகளில் அடக்க இயலா ... ஒரு முறை சென்று வியந்து வாருங்கள்!

மேலும்  இங்கு நூலகம், பழைய குடியிருப்புக் கட்டடங்களும், அன்னி பெசன்ட் அம்மையாரின் கல்லறையும் அமைந்துள்ளது

இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த தியோசோஃபிகல் சொசைட்டி உலா ஓர் புதிய அனுபவமாக இருக்கும்.

அனுமதி இலவசம்.

பார்வையாளர் நேரம் (ஞாயிறு விடுமுறை)
காலை 8.30 மணி முதல் 10 வரை
மாலை 2 மணி முதல் 4 மணி வரை

மேலும் விபரங்களுக்கு: TS Adyar

நாம் அறிந்த வரையில் பொது மக்களுக்காக இரு வழிகள் உள்ளன. முதல் வழி ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை எதிரிலும், இரண்டாம் வழி பெசன்ட் அவென்யூ சாலையிலும் உள்ளது. மொத்த இடங்களையும் சுற்றி பார்க்க முதல் வழியும், அடையாறு ஆலமரத்தை வியக்க இரண்டாம் வழியும் ஏதுவாக இருக்கும்.




திறந்தவெளி அரங்கம்





சமூக உறுப்பு நாடுகளின் பெயர்கள் (52)












விதவிதமான கள்ளி செடிகள்


புத்தர் கோவில்








பல்வேறு வகையிலான தாவரங்கள்







கோவில் தூணில் ... சிற்பங்கள்









பழந்தின்னி வௌவால்கள்




அடையாறு ஆலமரம்