Saturday, July 1, 2017

பரளிக்காடு - Baralikadu


நேற்றைய (30-ஜூன்-17) இரவை கோத்தகிரியில் கழித்துவிட்டு, காலையில் விரைவாக எழுந்து மேட்டுப்பாளையம் சென்றோம். காலை உணவை மேட்டுப்பாளையத்தில் முடித்துவிட்டு அப்படியே பரளிக்காடு செல்ல உத்தேசம். பரளிக்காடு செல்ல வனத்துறையின் முன் அனுமதி பெறுதல் அவசியம். நாங்கள் முன்னரே தெரிவித்தமையால் ... மேட்டுப்பாளையத்தில் காலை உணவை முடித்து விட்டு பரளிக்காடு நோக்கி பயணித்தோம்.

பரளிக்காடு

பவானிக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் பின்பகுதியில் உள்ளது பரளிக்காடு. வனப்பிரதேசமான இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையினர் கட்டுப்பாட்டில் நடந்து வருவது சூழல் சுற்றுலா. தமிழகத்திலேயே வனத்துறையினர் கண்காணிப்பில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் ஒரே சூழல் சுற்றுலா தலம். மனம் மயங்கும் கொஞ்சும் இயற்கை எழில், தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் ஆறு, இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகில் நிரம்பி உள்ளது பரளிக்காடு.

மறக்கமுடியாத அனுபவத்தோடு, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்களுக்கு பரளிக்காடு சரியான தேர்வாக இருக்கும். இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியுடன், மது மற்றும் புகைபிடிக்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், போன்ற சில கட்டுபாடுகளை ஏற்கிறோம் என உறுதியளித்து வனத்துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் பரளிக்காட்டிற்கு சுற்றுலா செல்ல தடையில்லை.

பரளிகாட்டில் சுற்றுலா பயணிகள் தங்க வசதி உள்ளது. 8 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள், 5 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

முன் அனுமதி மற்றும் விபரங்களுக்கு

(+91) 9047051011
(+91) 9843094900
(+91) 9489739273 

(0425) 4275423


சனி, ஞாயிறு மற்றும்  அரசு விடுமுறை நாட்கள் மட்டும்.

வார நாட்களில் 60 பேர் கொண்ட குழுவினர் சென்றால் மட்டும் அனுமதி வழங்கப்படும்.



  
மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளியங்காடு வரை சாலை அழகாய் ... அதன் பின்னர் கரடு முரடாக ...



இருமருங்கிலும் வாழை, தென்னை எனத் தோப்புகள், தோப்புகளில் மயில்கள் என அழகோவியமாய்.



பரளிக்காடு படகுத் துறை

பெரிய ஆலமரங்களில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சல் ... வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஆட!



நம்மை சூடான கொத்தமல்லிக் காப்பியோடு வரவேற்கின்றனர்.



அணையில் தோராயமாக ஒரு மணி நேர படகுப் பயணம்.













அணையில் தோராயமாக ஒரு மணி நேர படகுப் பயணம். நன்கு களைத்தப்பின் அங்கு வாழும் பழங்குடியினர் சமைத்த உணவு ... காட்டில் இத்துனை ருசியான உணவா ... என வியக்கும் வண்ணம் அருமையான உணவு (அசைவம் உட்பட)




உண்டு ... சிறிது ஓய்வெடுத்தபின் ... சிறிது நேரப் பயணத்திற்குப் பின் ஆற்றுக்குளியல் ... மனதும், உடலும் குளிர !



வனவிலங்குகள் மலையிலிருந்து இறங்காமல் இருக்க மலையைச் சுற்றி அகழி!






சூழல் சுற்றுலா முடிந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி, வழியில் வனபத்ரகாளியம்மனை வணங்கிவிட்டு ...







அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

1. கோத்தகிரி - Kotagiri
2. இரங்கசாமி சிகரம் & தூண் (Rangaswamy Peak & Pillar)
3. கொடநாடு காட்சி முனை (Kodanad View Point)
4. தட்டப்பள்ளம் எஸ்டேட் நடைபயணத்திற்கு - Thattapallam (Estate) Trekking
5. Katary Water Falls
6. Kullakamby Water Falls


No comments:

Post a Comment