"திருப்போரூர் கந்தசுவாமி கோவில்" குறித்து நமது பதிவுகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple (2017)
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple (2012)
திருப்போரூரில் மேற்கு திசையில் அமைந்துள்ளது "பிரணவமலை". இம்மலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் "பாதுகாக்கப்பட்ட சின்னம்" என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ... அதற்கான எவ்வித்த அறிகுறிகளும் தென்படவில்லை. எங்கும் பாலித்தீன் குப்பைகள், கோவில் நடை மூடப்பட்டுள்ள நேரங்களில் பெரும்பாலும் "பார்"களைப்போல ... எங்கும் குடிமக்கள்!
மலைக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
Courtesy: Google Maps
மலைக்கோவிலின் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா வளைவு. தற்சமயம் பள்ளி வேறொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய வளாகம் தற்சமயம் பல சமூக விரோத நபர்களின் புகழிடமாய் ...
பள்ளியின் பழைய வளாகம்
நுழைவு மண்டபம்
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் "பாதுகாக்கப்பட்ட சின்னம்" என அறிவிக்கப்பட்ட அறிவிப்புப்பலகையே யாருக்கும் தெரியாத வண்ணம் புதருக்குள் ...
உச்சி நோக்கிப் படிகள் ...
சிதம்பர சுவாமிகள் தியான மண்டபம்
விநாயகர் ஆலயம்
அருள்மிகு பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்
திருப்பணி என்ற பெயரில் பழமையிழக்கும் கோவில்கள் பட்டியலில் இன்னும் சேராமல் (சேருவதற்கான பக்தர்களின் வரவும் குறைவே!) ... பழமையாய் .. .அழகாய் ...
சிதம்பர சுவாமிகளின் சமாதியென்றும், அவர் திருப்போரூர் முருகன் ஆலயத்திலிருந்து இங்கு வந்து சென்ற சுரங்க வழி யென்றும் உலவும் உள்ளூர் கதைகள்.
மலையிலிருந்து திருப்போரூர் முருகன் ஆலயம்
சுயம்புவாக தோன்றிய முருகன் சிலையிருந்த இடமாகக் கருதப்படும் பகுதி (கோவிலின் வடதிசையில்)
நன்கு பராமரிக்கப்படாமல் பொழிவிழக்கும் ஆலயங்களுள் இதுவும் ஓன்றாகவே, கோவிலை விட்டு வருகையில் நமது எண்ணமாக!
அந்த ஊர் மக்கள் மனம் வைத்தால் நல்லது.
ReplyDelete