பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் - Periyar Science and Technology Centre (2010)
பெரிய அளவிலான தஞ்சாவூர் பொம்மை
கடந்த டிசம்பர் 2016ல் சென்னையை உலுக்கிய "வர்தா" புயலால் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
பரிணாம வளர்ச்சிப் பூங்கா
"நியாண்டர்தால்" மனித இனம்
மனிதரில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆனால் தற்பொழுது, மற்ற இனங்கள் அழிந்துவிட எஞ்சியிருப்பது “ஹோமோ சேபியன்” ஆகிய நாம் மட்டுமே உள்ளோம். அழிந்து விட்ட மற்ற மனித இனங்கள் எத்தனை என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
நியாண்டர்தால் மனித இனம் நம்மோடு (ஹோமோ சேபியன்) வாழ்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டது. நியாண்டர்தால் மனித இனத்தின் அழிவிற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
நியாண்டர்தால் மனிதர்கள் மிகவும் அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பொம்மலாட்டக் கதைகள்
கோளரங்கம்