புத்தாண்டை வரவேற்க வழக்கம் போல் கடைசி நிமிட திட்டமிடல் இம்முறை ஏலகிரி கூடார அனுபவத்திற்கு!
ஏலகிரி குறித்து நமது முந்தைய பதிவு(கள்)
நண்பர்களின் குடும்பத்துடன் சென்னையிலிருந்து ஏலகிரிக்கு காரில் சென்றடைந்தோம். மதிய உணவை உண்ட பின்பு ஏரி பூங்கா, கடைவீதி என ஒரு சுற்று வந்தப்பின் கூடார முகாமிற்கு சென்றோம்.
நல்ல புல்வெளி, திறந்தவெளி திரை, ஒலிபெருக்கிகள், மின்விளக்குகள், தொலை நோக்கி என குதூகலமான சூழல் !!!
இரவு உணவை உண்டபின்பு குளிர் தாங்க முடியாமல் கூடாரத்திற்குள் அடைந்து கொண்டோம் ... நள்ளிரவு 12 மணி நெருங்கும் வேலையில் மீண்டும் வெளியில் வந்து ஒரு ஆட்டம் பாட்டம் ... சில நிமிடங்களில் மீண்டும் கூடாரத்திற்குள்!!!
எங்களை போல நிறைய பேர் வித்யாசமான அனுபவத்திற்காக வந்திருந்ததால் கூட்டம் சற்று அதிகமாகவே .. படுக்கை விரிப்புகள், தலையணை என கொஞ்சம் பற்றாக்குறை வேறு ... தாங்கமுடியாத குளிரில்!!!
என்னுடைய நண்பர்கள் என்னை பார்த்த விதம்!
காலையில் ஒரு சிறு நடை காட்டு வெளியில் ... பின்பு காலை உணவிற்கு பிறகு ஏரி பூங்காவிற்கு கிளம்பினோம். சிறார்கள் விளையாட சிறிது நேரம் செலவிட்ட பின்பு .. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சென்று ஒரு குளியலை போட்டு விட்டு சென்னை திரும்பினோம்!
கொட்டும் பனியில் விண்மீன்களுடன் கூடாரத்தில் ஓர் இரவு ... புத்தாண்டை வரவேற்க, பார்ப்போம் இந்த ஆண்டு எவ்வாறு பயணிக்கிறது என்று !!!