(இ)ரங்கநாதன் தெரு, தி(யாகராய).நகர் - சென்னை
சென்னைவாசிகளுக்கு பழக்கப்பட்ட (இ)ரங்கநாதன் தெரு இந்தியாவின் முக்கிய வணிகத் தெருக்களில் ஒன்றாகும். இத்தெரு ஆண்டு முழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ஒரு பகுதியாகும்.
குண்டூசி முதல் தங்கம், வைரம் வரை அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். பல காய்கறி அங்காடிகளும் இரங்கநாதன் தெருவில் உள்ளன. பல்வேறு துணிக் கடைகளும், நகைக்கடைகளும் இப்பகுதியில் தங்களுடைய ஒரு கிளையையாவது இங்கே வைத்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக் காலங்கள் மற்றும் அனைத்து குடும்ப விழாக்களுக்காக ஆடை அணிகலன்கள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப்பகுதிக்கு வருகிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூடச் சிறப்புத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பகுதிக்கு வருவதைக் காணமுடியும்.
எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய! தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Friday, February 27, 2015
Thursday, January 1, 2015
தட்சிண சித்ரா - Dakshina Chitra
தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும். இது சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு கலாச்சார மையம் சுமாராக 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கேரளா - Kerala
தமிழ்நாடு - Tamil Nadu
கர்நாடகா - Karnataka
ஆந்திரா - Andra Pradesh
பொம்மலாட்டம் - Puppet Show
DakshinaChitra is an exciting cross cultural living museum of art, architecture, lifestyles, crafts and performing arts of South India. The main mission is to exhibit, promote and preserve aspects of the broader, more inclusive cultures of the states and to bring these arts to the public in a participative, enjoyable and engaging way. DakshinaChitra Heritage Museum , a project of Madras Craft Foundation an NGO was opened to the public on December 14th 1996. The Museum is located overlooking the Bay of Bengal, at Muttukadu, twenty five kilometers south of Central Chennai, on the East Coast Road to Mamallapuram, Tamil Nadu, India.
மேலும் தகவலறிய / More @ DakshinaChitra
கேரளா - Kerala
தமிழ்நாடு - Tamil Nadu
கர்நாடகா - Karnataka
ஆந்திரா - Andra Pradesh
பொம்மலாட்டம் - Puppet Show
கிராம பக்தியாட்டம்
குறிச்சொல்
அருங்காட்சியகங்கள் - Museums,
சென்னை - Chennai
Subscribe to:
Posts (Atom)