Tuesday, March 10, 2020

சென்னை கலங்கரை விளக்கம் - Chennai Lighthouse

சென்னை கலங்கரை விளக்கம் (Chennai Lighthouse) சென்னை, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ளது. 10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்றவற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.















கடற்கரையில் நுரையோடு, அலையோடு இன்புறுதலை போலவே கலங்கரை விளக்கத்திலிருந்து கடலை ரசித்தலும் ஓர் சுகமான அனுபவம்!

Wednesday, February 19, 2020

செம்மொழிப் பூங்கா - Semmozhi Poonga

சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள பூங்கா. சென்னை அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் 700 வகையான தாவரங்களைக் கொண்டு செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.