Saturday, December 15, 2018

நெல்லியம்பதி - Nelliampathy


கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடம்.

வழக்கம் போல நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக நண்பர்களோடு பயணம் ... சென்னையிலிருந்து பாலக்காடு வரை இரயிலிலும் பின்னர் வேனில் நெல்லியம்பதி கிராமம் வரை.


இரயிலிலிருந்து வேனுக்கு மாரி, நெல்லியம்பதி நோக்கி எங்களது பயணம் தொடங்கிற்று. பாலக்காடு புறவழிச் சாலையில் ஒரு தேநீர் விடுதியில் கட்டஞ்சாயா (வர டீ) குடித்துவிட்டு ... அப்படியே காலைக் கடன்களை முடித்து ... செவி விரிய சத்தமான இசையோடு ... பயணிக்கலானோம்.

வழியெங்கும் சிற்றாறுகள், குளங்கள் ... கேரளா வரும்பொழுதெல்லாம் நமக்கு ஏக்கங்கள் மட்டுமே .... இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைக் குறித்து!

நென்மாரா பகவதி அம்மன் கோவில்
Sri Nellikulangara Bhagavathi Temple (Nenmara)

அழகிய குளம் எதிரே ஆலயம், குளத்தில் நன்கு குளித்து, உடல் குளிர்ந்து ... கோவிலுக்குள் உள்ளமும் குளிர்ந்து ... சுற்றுலா இனிதே தொடங்கியதாக எண்ணம்.


நெல்லியம்பதி செல்லும் வழியில் போத்துண்டி அணை

போத்துண்டி அணை 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்றாகும். பாலக்காடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் நீர் பாசனம் அளிக்கிறது. இந்த அணையின் சிறப்பு அம்சம் இதன் சுவர் ஆகும், இது வெல்லம் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கட்டப்பட்டுள்ளது.











நண்பகல் வேலையில் ஒரு வழியாக நெல்லியம்பதி கிராமத்தை அடைந்தோம். இங்கிருந்து தங்கும் விடுதிக்கு வன அனுமதி பெற்ற ஜீப் பயணம். நாங்கள் எதிர்பார்த்த ஜீப் பயணம், நல்ல சாலை என்பதல்ல இங்கு பிரச்சனை, சாலை என்றால் என்பது போன்ற சாலை ....



அடர்ந்த வனப்பகுதியில் ... ஏற்ற இறங்கள் புரிவதற்குள் .... இடது வலது திருப்பங்கள் ... 





மழைக்காலங்களில் மண் அரித்து ஜீப்பில் செல்வோர் அனைவரும் இறங்கி தள்ளிய நிலைக் கூட உண்டாம். நாங்கள் மொத்தம் 12 பேர் ... ஜீப்பிற்கு தலா 6 பேர் வீதம் சென்றோம் ... நாம் சென்ற 2வது ஜீப் வழியில் டயர் வெடித்து ... அதை மாற்ற அனைவரும் மெக்கானிக் ஆனக் கதை தனி!



மலைமுகடுகளைக் கடப்பதே மிகவும் அற்புதமான ஓன்று!


பல குலுக்களுக்கு பிறகு விடுதியை அடைந்தோம்.


சூழலை இன்புற ஏற்ற விடுதி ... அதிக வசதிகள் குறித்து எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் சொர்க்கம்!


நாங்கள் தங்கியது Dormitory வகை, இங்கு வேறு விதமான தனி அறைகளும் உள்ளன. மேலும் விபரங்களுக்கு Misty Valley Resorts

சுமார் 400 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்த வனத்தில் தங்கும் விடுதி ... ஆரஞ்சு, சப்போட்டா பழ மரங்கள் ...





வன அணில்



மலை முகட்டில் ... ஆங்கிலேய காலத்து கட்டிட எச்சங்ககள்



இரவு வன உலாவில் காட்டெருமை, மான் போன்ற விலங்குகளை கண்டு களித்தோம் ... யானை சாணங்களை மட்டுமே காண இயன்றது ... யானைகளை காணும் வாய்ப்பு எங்களுக்கு எட்டவில்லை!


இரவில் நல்ல குளிர் .. சூடான சுவையான உணவு !!!


எங்களுது அறைக்கு அருகில் தீ மூட்டப்பட்டு ... இசையோடு ஆடல் பாடல் !!!


காலையில் நண்பரது திருமணத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் சுடுநீர் கிடைப்பதுற்குள் குளிர் நீரில் குளித்து காலை உணவை உண்டு.... அடடா அருமை!

காப்பிச் செடிகள்



வாசகர்களுக்கு ஒரு கொசுறு தகவல் கும்கி 2 வின் சில பகுதி இங்கு படமாக்கப் பட உள்ளதாக செய்தி.

மீண்டும் கரடுமுரடான சாலையில் நெல்லியம்பதி வந்தடைந்து அங்கிருந்து நண்பரது திருமணத்திற்கு சென்று நண்பரை வாழ்த்திவிட்டு வயிறார கேரள உணவை உண்டு.... அப்படியே மலம்புழா அணை நோக்கி

மலம்புழா அணை

மலம்புழா அணை 28.5 ஏக்கர் பரப்பளவில் மலம்புழாத் தோட்டம் என்னும் கண்கவர் தோட்டத்தையும், இழுவை வண்டியையும் (Ropeway), குழந்தைகள் பூங்காவையும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் பல பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டியும் (Aquarium), பாம்புப் பூங்காவையும் கொண்டுள்ளது. இங்கு மலைப்பாம்பு , நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்படப் பலவகைப் பாம்புகள் உள்ளன.மேலும் ஜப்பானீஸ் பூங்கா, பாறைப் பூங்காவையும் (Rock Garden) அருகில் கொண்டுள்ளது.


















அணையை ரசித்து விட்டு சிலபல தின்பண்டங்களை வீட்டிற்க்கு வாங்கி விட்டு, நல்ல நினைவுகளை சுமந்துக் கொண்டு,  மீண்டும் பாலக்காடு இரயில் நிலையம் வந்தடைந்தோம்... மீண்டும் சென்னை ... மீண்டும் அதே தினசரிகள்!