Friday, June 30, 2017

கோத்தகிரி - Kotagiri


கோவை அல்லது மேட்டுப்பாளையம் செல்வோர் பெரும்பாலும் ஓய்வெடுக்கவும், சுற்றி பார்க்கவும் ஊட்டி இல்லாவிடில் குன்னூரே அதிகம் பயணிப்பர். நாங்கள் (நண்பர்களோடு) இம்முறை கோத்தகிரியில் சுற்றிப் பார்க்க முடிவெடுத்து சென்னையிலிருந்து கிளம்பினோம்.

பயணிக்க காரணம் ஓன்று வேண்டுமல்லவா, வீட்டில் அனுமதி பெற?! இம்முறை காரணம், நண்பர் ஒருவரின் மகள் காதுகுத்து விழாவிற்கு (கல்யாணம், காதுகுத்து என ஏதாவது ஒரு காரணம் முக்கியமல்லவா? நாம் ஊர் சுற்ற!)

சென்னையிலிருந்து இரயிலில் பயணித்தோம் கோவை வரை. பிறகு அங்கிருந்து Van ல் கோத்தகிரி நோக்கி.... வழியில் மேட்டுப்பாளையம் Black Thunder அருகில் காலைக்கடன் முடித்து குளித்து கிளம்ப சில பல  தனியார் விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றில் நாங்கள் தயாராகி ... காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.


வழியிலுள்ள அய்யனாரை வணங்கிவிட்டு ...



மேட்டுப்பாளையம் காட்சி முனையிலிருந்து ... நீர்வழி வாய்க்கால் (சிற்றாறு)


மக்கள் அதிகம் இல்லாத கிராமங்கள், பசுமையான மலைத்தொடர்கள் ... அழகான சாலை ... Van ல் ரம்மியமான மனதை வருடும் பாடல்கள் .... நண்பர்களோடு பயணம் ... என மகிழ்வான உணர்வுகள் அனைத்தும் வார்த்தைகளில் அடங்கா !



பலா மரங்கள் ஆங்காங்கே ...






கோத்தகிரியிலிருந்து ஊருக்கு வெளியே .. அமைதியான ... அழகிய மலைத்தொடர்களை பார்த்தவாறு உள்ள தனியார் விடுதியில் .. எங்களது அறை !!!



அறையிலிருந்து கேத்தரின் அருவியை நோக்கி பயணித்தோம். ஊட்டி, குன்னூர் அருகிலுள்ள "டால்பின் நோஸ்" முனையிலிருந்து தெரியும் அருவி ...

நடைபயணம் செல்வோர் சற்று கவனமாக இருத்தல் நல்லது  ... காட்டெருமைகள் வழியெங்கும்!



தடாகத்தின் மீதுள்ள மற்றொரு தனியார் விடுதி


கேத்தரின் அருவி காட்சி முனை நோக்கி ...


கேத்தரின் அருவி காட்சி முனை





தூரத்தில் தெரியும் அருவி





பின்னர் அங்கிருந்து அருவி நோக்கி நடை பயணம். வழியெங்கும் கொய்யா, அத்தி என பழ மரங்கள் ...



நகரத்தில் கான்கிரீட் காடுகளில் ... வசிக்கும் எம்மை போன்றோருக்கு ... இங்குள்ள ... வீடுகள் ... அத்துனை அழகாய் !!!



மலைப்பாதைகள் கூட ஓவியங்கள் போல !


மலை வாழை


கேத்தரின் அருவி காட்சி முனை





கேத்தரின் அருவி(யின் சிறு பகுதி)





அருவியில் குளிர்ந்த நீரில் நெடுநேரம் குளித்து களைத்து ... கிளம்பினோம்.


வழியில் நாவல் மரத்தை பார்த்ததும், பசியில் ... முடிந்த அளவு மரத்தில் ஏறி ... கிடைத்த அளவு உண்டுவிட்டு கிளம்பினோம். மலை நாவலின் சுவையே தனிதான் ... அதிலும் பசிநேரத்தில்!


மதிய உணவை மாலையில் .. கோத்தகிரியில் உண்டுவிட்டு ...  அப்படியே தங்கியுள்ள இடத்தை சுற்றி ஓர் நடை பயணம் !




நடந்து களைத்தப்பின் ... மீண்டும் அறை நோக்கி!


பாதையில் கவனம் இருக்கட்டும் வழியில் நீண்ட ..... மண்புழுக்கள் கூட கடக்கலாம் !


ஊட்டி, குன்னூர் ... அதிகமுறை பயணித்தவர்கள் ... தாராளமாக கோத்தகிரிக்கு ஒரு முறை சென்று வரலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

1. பரளிக்காடு - Baralikadu
2. இரங்கசாமி சிகரம் & தூண் (Rangaswamy Peak & Pillar)
3. கொடநாடு காட்சி முனை (Kodanad View Point)
4. தட்டப்பள்ளம் எஸ்டேட் நடைபயணத்திற்கு - Thattapallam (Estate) Trekking
5. Katary Water Falls
6. Kullakamby Water Falls