Sunday, April 9, 2017

சதுரகிரி - Sathuragiri


சென்னையிலிருந்து சதுரகிரி பயணத்திற்காக நண்பர்களோடு பேருந்தில் பயணித்தோம்.

திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள புராதன சிவன் கோயில். தமிழ் வருடம் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வர். நாலாபுறமும் மலை சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என்ற இன்னொரு பெயரும் உண்டு. சதுர் (நான்கு) வேதங்கள் இங்கு சந்தித்து கிரி (மலை) உருவாகியதால் சதுரகிரி எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்றும் ஒரு கூற்று. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.

Courtesy: Google Maps




பெரும்பாலும் அனைவரும் தவிர்க்கும் கோடையில் எங்களது பயணம். புளி நன்றாகக் காய்த்து, தேசிய / மாநிலச் சாலைகள்  அகலமாக்கப் பட்டதில் பெரும்பாலான புளிய மரங்களை இழந்து விட்டோம்.


பாதாம் மரம்


ஒரு புரிதலுக்காக பாதாம் ...


சதுரகிரி நடைபாதையிலுள்ள கோவில்கள்

1. கருப்பண்ண சாமிக் கோவில்
2. பேச்சியம்மன் கோவில்
3. கோரக்கர் குகை
4. இரட்டை லிங்கம்
5. பலாவடிக் கருப்பண்ண சாமிக் கோவில்
6. சுந்தர மகாலிங்கக் கோவில்
7. சந்தன மகாலிங்கக் கோவில்


நாம் நமது நண்பர்களோடு தாணிப்பாறையில் இருந்து பயணத்தைத் தொடங்கினோம்.




முதல் 2 கிமீ க்கு நல்ல பாதை போடப்பட்டுள்ளது. அதற்குப் பின் சற்று கடினமே!


கருப்பண்ண சாமிக் கோவில்





பேச்சியம்மன் கோவில்


நீர் சுனை (பெரும்பாலானவை வற்றியே, கோடை என்பதாலும் கடந்த ஆண்டு பருவ மழைப் பொய்த்ததாலும்)



வழுக்குப்பாறை





வறண்ட  அருவி (தடம்)



சிங்கவால் குரங்கு


உச்சி நோக்கி நடைபாதையில் இடது புற மலையில் இந்த லிங்க உருவ ஓவியத்திற்கு அருகிலுள்ளது நீர்வீழ்ச்சி (தற்சமயம் வறண்டுள்ளது.) மற்றும் கோரக்கர் குகை





கோரக்கர் குகை




இரட்டை லிங்கக் கோவில்







பலாவடிக் கருப்பண்ண சாமிக் கோவில்




சுந்தர மகாலிங்கக் கோவில்


பக்தர்கள் இரவில் தங்குவதற்கான ஓய்விடம்





போதிய வழித் தெரியாதாக் காரணத்தால் தவசிப் பாறை செல்ல இயலவில்லை.

24 மணி நேரமும் அன்னதானமும், குடிநீரும் கிடைப்பது சதுரகிரியின் சிறப்பு!

நாமும் நம்மால் முடிந்த அளவு அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களை தாணிப்பாறை வரும் வழியிலில் வாங்கி வந்து ... இங்கு வழங்கினோம். கொடுக்க மனது பெரிதாக இருந்தாலும் சுமக்க முடிந்த அளவு நீங்களும் வாங்கி வந்து வழங்கலாம்.


உணவருந்தியப் பின் சிறிய ஓய்வெடுத்து மீண்டும் கீழே இறங்கினோம்.

எவ்வளவு வயது ஆனாலும் தொட்டால் சினிங்கி செடியிடம் விளையாட மனம் விரும்பத்தான் செய்கிறது!


வழியெங்கும் வண்ண மலர்கள்



உருவங்கள் பொறிக்கப் பட்டதை போன்ற பாறைகள் - மலைகள்.