Saturday, March 4, 2017

வெள்ளியங்கிரி - Velliangiri


தென் கைலாயம் என அழைக்கப்படும் "வெள்ளியங்கிரி"க்கு எல்லோரும் எவ்வித பாகுபாடுமின்றி  நடந்து மட்டுமே மலையேற இயலும் என்பது சிறப்பு.

வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து வெள்ளியங்கிரிக்கு நண்பர்களோடு Vanல் பயணித்தோம்.

மலையேற்றத்தில் போதிய அனுபவம் இல்லாதவர்களும், மிக மெதுவாக மலையேறுபவர்களும் எங்களது அணியில் இருந்ததாலும் ... பயண நேரத்தை துல்லியமாக கணக்கிட இயலாததாலும்  .. Van ல் சென்றோம்.

சனிக்கிழமை காலை "ஈஷா"வில் குளித்து, காலை உணவை முடித்து "ஆதியோகி"யை வணங்கிவிட்டு பூண்டி சென்றோம்.

 ("ஈஷா" குறித்து நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நண்பர்களோடு செல்கையில் தவிர்க்க இயலாமல்)



பூண்டி ... வெள்ளியங்கிரி மலையின் அடிவாரக் கிராமம். வாகனங்களுக்கென பெரிய வாகன நிறுத்துமிடம் இருந்தாலும் கடைகள் அவ்வளவாக இல்லை. நமக்கு தேவையானவற்றை நாம் கொண்டுவருவதே மிக நல்லது!


சபரி மலை பெரிய பாதையில் பயணித்திருந்தாலும் இங்கு மூங்கில் தடி வாங்கிக் கொண்டு மலையேறுவதே சிறந்தது. ஏனென்றால் மலை இறங்க மூங்கில் தடியே உங்களுக்குத் துணை.

மலை உச்சிக்கு மிக அருகில் வந்தும் சுயம்புலிங்கத்தை தரிசிக்க முடியாமல் திரும்பியவரையும் நாம், நமது பயணத்தில் கண்டோம். உடல் வழு ... மன வழு ... அதற்கு மேல் .... அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.


மாசி மாத மகாசிவராத்திரியிலிருந்து இங்கு கோவில் நடை முறையாக திறக்கப்படுகின்றது. கோவிலுக்கு மாசி (பின் பாதி), பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி (முன் பாதி) வரை வனத்துறையால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மற்ற காலங்களில் வன விலங்குகள் மற்றும் பாதை வழியே நீரும் இருக்க வாய்ப்பிருப்பதால் வனத்துறை அனுமதிப்பதில்லை. மீறி சென்று பாதுகாப்பாக திரும்பி வருவதும் கடினமே.

இவ்வனத்தில் யானை, சிறுத்தை, கரடி, ஓநாய் என அச்சுறுத்தும் விலங்குகளும் இருப்பதால் மற்ற காலங்களில் பயணிப்பதைத் தவிர்த்தல் நல்லது. கோடைகாலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் சிறுவாணி நீர்தேக்க பகுதிகளுக்கு (கேரளா) வன விலங்குகள் புலம் பெயருவதால் ... மலையேறுபவர்களுக்கு எந்த இடையூரும் இல்லை.

நாம் நமது பயணத்தில் குரங்குகள், பாம்பு மற்றும் விநோதமான கீரியை ஒத்த பிராணியை மட்டுமே கண்டோம்.

இங்கு பெரும்பாலும் ஏழு மலை என்கிறார்கள், நமக்கு ஏழு மலையா அல்லது நிலையா என்பதில் ஐயமே!

அடிவாரக்கோவில்





மலையேற்றம் (தொடக்கம்)


108 ஆம் (நாம் படிகளை எண்ணவில்லை) படியிலுள்ளக் குகைக்கோவில்




முதல் இரண்டு மலைகளுக்கு படிகள் இருந்தாலும் மிக்கடினமானதாகவே.




முதல் மலை முடிவில் வெள்ளைப்பிள்ளையார் கோவில்


இரண்டாவது மலை



வழுக்குப்பாறையில் படிகள் வெட்டியவர் குறித்த தகவல் கல்வெட்டு.


வழுக்குப்பாறைப் படிகள்




பாம்பாட்டிச் சுனை


மூன்றாம் மலை


யானைப்பாறை (மரத்திற்கு பின்னால் யானையைப் போன்ற பெரியப் பாறை))


பாம்பாட்டி சித்தர் குகை (யானைப்பாறை அடியில்)









மூன்றாவது மலையின் முடிவில் கைத்தட்டிச் சுனை


நான்காவது மலை








கடந்த வருடம் பருவ மழைப் பொய்த்ததால் பெரும்பாலும் தாவரங்கள் பட்டுப்போகி ...  காட்டுத்தீ ஏற்படாமலிருக்க வனத்துறையினர் பகுதி பகுதியாக எரித்து விட்டனர்.



ஐந்தாவது மலை



அரிய வகை வன நெல்லி


பீமன் களியுருண்டைப் பாறைகள்




ஆறாவது மலை (இறக்கம்)



கடந்த வருடம் பருவ மழைப் பொய்த்ததால் பெரும்பாலும் தாவரங்கள் பட்டுப்போகி ...  காட்டுத்தீ ஏற்படாமலிருக்க வனத்துறையினர் பகுதி பகுதியாக எரித்து விட்டனர்.



ஏழாவது மலை


ஆறாவது மலையின் முடிவில் ஆண்டிச்சுனை/பிரம்பித் தீர்த்தம்


இங்கு குளிர்ந்த நீரில் குளித்தபொழுது அத்துனைக் களைப்பும் நீங்கி உடலும், மனதும் லேசாக!


தான்தோன்றி விநாயகர்


இதுப்போன்ற குகைகள் (பெரிய பெரிய பாறைகளுக்கு அடியில்) நமது கண்களுக்கு புலப்படாமல் மிக அதிகம் உள்ளது. ஒரு காலத்தில் சித்தர்கள் வாழ்ந்திருக்கலாம், ஆனால் தற்சமயம் வனவிலங்குகளின் வசிப்பிடமாக இக்குகைகள்...  ஆதலால் தேவையற்ற சாகசங்களைத் தவிர்த்தல் நல்லது.


மாலை நெருங்குகையில் மேகமும், பனியும் சூழ ...




ஏழாவது மலை உச்சியில் முகப்பிலுள்ள விநாயகர் கோவில்


மனோன்மணி திருக்கோவில்


சுயம்புலிங்கம் (வெள்ளியங்கிரி ஆண்டவன்)


கடினமானப் பாதைக் கடந்ததெல்லாம் மறந்துப் போகும் .. மலை உச்சியில் குளிர் காற்று வீசும் பொழுது இறையடியிருக்கையில்...

நந்திப்பாறை (நந்தியைப் போன்ற மிகப் பெரிய பாறை)


பயணிப்பவர்களுக்கு:

1. தண்ணீர் பாட்டில் 1அல்லது 2 (நீர் தீர்ந்துப் போகையில் சுனைகளில் நிரப்பிக் கொள்ளலாம்)
2. மூங்கில் தடி
3. இரவில் பயணித்தால்: டார்ச் லைட் (மிக மிக அவசியம்)
4. பழச்சாறோ, Glucose / Electral போன்றவை.
5. தேவையற்ற உணவையோ / பாரத்தையோ  சுமப்பதைத் தவிர்த்தல் நல்லது.