வார விடுமுறையை கழிக்க நண்பர்களோடு "தடா" நீர்வீழ்ச்சிக்கு பயணித்தோம்.
உப்பலமடுகு நீர்வீழ்ச்சி (தடா அருவி, கம்பகம் அருவி) இது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி காம்பகம் காடு (அ) சித்துலியா கோனா என்ற காட்டுப்பகுதியில் உள்ளது. பசுமை, நீர்வீழ்ச்சி, சிறுகுன்றுகள் நிறைந்த இப்பகுதி உலா, மலையேற்றம் மற்றும் உல்லாசப்பயணத்திற்கு ஏற்றதாகும்.
சில நேரங்களில் 10 அடி பாறைகளையும் தொற்றி ஏறவேண்டிவரும்.
மிகவும் அபாயகரமான பாறைகளைக் கடந்து ...
அபாயகரமான நீச்சல்குளம் (DANGER SWIMMING POOL)
இவற்றையெல்லாம் கடந்து மீண்டும் மலையேறினால் ... நீர்விழ்ச்சி.
இதற்குப் பின்னர் பாதை கடினமானதாக மாறிவிடும். போதிய வழிகாட்டு குறியீடுகள் ஏதும் இல்லாததாலும், நீர்வரத்து அதிகம் இல்லாத காலம் என்பதாலும் நமது பயணம் இத்துடன் முடிவடைந்தது.
அப்படியே பாலிதீன் மற்றும் மக்காத தண்ணீர் பாட்டில்களையும் நம்மால் முடிந்த அளவு சேகரித்தோம். மேலும் விபரங்களுக்கு "தடா" அருவியில்
தயவு செய்து பொது இடங்களில் குப்பைகளை எறியாதீர்.