Friday, February 27, 2015

பெசன்ட் நகர் கடற்கரை - Besant Nagar / Eillot's Beach

எத்துனை முறை வந்து சென்றாலும் அலுக்காத இடம் "கடற்கரை", அதுவும் ஆட்கள் நடமாற்றம் குறைந்த இரவு நேரங்களில் தனிமையில் கடற்கரையில் படுத்து வானை... அலையோசையோடு ரசித்தல் சொர்க்கமே!!!



இரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை - Renganathan Street, T.Nagar, Chennai

(இ)ரங்கநாதன் தெரு, தி(யாகராய).நகர் - சென்னை

சென்னைவாசிகளுக்கு பழக்கப்பட்ட (இ)ரங்கநாதன் தெரு இந்தியாவின் முக்கிய வணிகத் தெருக்களில் ஒன்றாகும். இத்தெரு ஆண்டு முழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ஒரு பகுதியாகும்.

குண்டூசி முதல் தங்கம், வைரம் வரை அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். பல காய்கறி அங்காடிகளும் இரங்கநாதன் தெருவில் உள்ளன. பல்வேறு துணிக் கடைகளும், நகைக்கடைகளும் இப்பகுதியில் தங்களுடைய ஒரு கிளையையாவது இங்கே வைத்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக் காலங்கள் மற்றும் அனைத்து குடும்ப விழாக்களுக்காக ஆடை அணிகலன்கள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப்பகுதிக்கு வருகிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூடச் சிறப்புத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பகுதிக்கு வருவதைக் காணமுடியும்.