கொடைக்கானல் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)
வார விடுமுறையில் கொடை நோக்கி ஓர் பயணம் ... சென்னையிலிருந்து உறங்கும் வசதி கொண்ட பேருந்தில்!
தலையாறு அருவியும், அணையும் நம்மை பனியோடு இனிதே வரவேற்றன.
தலையாறு அணை
தலையாறு அருவி
கொடை வந்தாயிற்று!!!
முதல் நாள்
Coakers Walk லிருந்து
முதலில் கடும் பனியாயிருந்த வானிலை பின்னர் கனமழையாய் ...
மழையோடு கடந்து பின்னர் பைன் காடுகள் (Pine Forest)
சிற்றருவி
செங்குதத்தாக நின்று நம்மை ஆச்சர்யமூட்டும் தூண் பாறை
மழைக் காலமென்பதால் வழியெங்கும் அருவிகள்
பசுமைப் பள்ளத்தாக்கு - Green Valley
சிற்றருவி
பிரையன்ட் பூங்கா (Bryant Park) வோடு இனிதே முதல் நாள் முடிவிற்று!
இரண்டாம் நாள்
பைன் காடுகள் (Pine Forest) கடந்து
குண்டாறு அருவி (Gundar Falls) நோக்கி ...
அருவிபோல் அல்லாமல் ஊற்று போல வழிந்தோடும் குண்டாறு அருவி !!!
அடுத்ததாக பூம்பாறை கிராமம் நோக்கி ...
வழியில் மஹாலக்ஷ்மி கோவிலில் வணங்கி விட்டு மீண்டும் பயணித்தோம்.
பழனி மலையைப் போல் சிறப்பு வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவில்!
மீண்டும் கனமழை ...
கோவில் வெளி முற்றத்தில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளனர்.
பூம்பாறை கிராமத்தின் விவசாய பூமியின் அழகியத் தோற்றம்!
மீண்டும் கொடை நோக்கி...
கொடை ஏரியின் எழில்மிகு தோற்றம்!
கொடை ஏரி
படகு சவாரியோடு நிறைவுற்ற நமது "கொடை" பயணம், இனிய நினைவுகளோடு மீண்டும் சென்னை நோக்கி...