தொங்குப் பாலம்
மருதமலை - Marutha Malai
கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.