நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு நண்பர்களோடு சென்னையிலிருந்து இரயிலில் பயணித்தோம். கோயம்புத்தூரிலிருந்து பரம்பிக்குளம் 96 கி.மீ Tempo Traveller ல் பொள்ளாச்சி, டாப்சிலிப் வழியாக சூடான காபியோடு தொடங்கியது எங்கள் பயணம்.
பொள்ளாச்சியில் சாரல் மழையும், டாப்சிலிப்பில் யானையும், குரங்குகளும் மற்றும் இதர பறவைகளும் குரலெழுப்பி இனிதாய் வரவேற்றன.
டாப்சிலிப் சோதனைச்சாவடி தொடர்ந்து அதே பாதையில் பரம்பிக்குளம் நோக்கி இதமான இசையோடு மிதந்துச் சென்றோம். பரம்பிக்குளம் சோதனைச்சாவடியில் மான்களும், மயிலும் எங்களை அன்பாய் வரவேற்றன.
நல்ல உணவு, இருப்பிடம் மற்றும் சிறந்த சேவைக்காக கேரள வனத்துறையினரின் சிறப்பான பங்களிப்பு நமக்கு மேலும் உற்சாகமளிக்கிறது.
Program Schedule (Kerala Forest Dept.)
Day 1
12.45 pm : Checkin
1.00 pm : Welcome drink (Soft)
1.30 pm : Lunch
2.45 pm : Briefing and Orientation
3.15 pm : Jungle Safari
5.00 pm : Bamboo Rafting
5.45 pm : Tribal Symphony
6.00 pm : Dusk Drive
8.30 pm : Dinner
Day 2
6.00 am : Wakeup call & Tea
6.30 am : Trekking & Bird Watching
9.00 am : Breakfast
10.00 am : Interpretation Centre
11.30 am : Checkout
வன உலா - Jungle Safari
வன உலாவில் மான்கள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மயில், குரங்குகள் மற்றும் பறவைகள் என மிகச் சிறப்பாய் அமைந்தது.
வானவில் - Rainbow
இயற்கையும் வானவில் கொண்டு இதமாய் வரவேற்றது.
மூங்கில் தெப்பம் - Bamboo Rafting
சாரல் மழையில் மூங்கில் தெப்பத்தில் பயணம் நாங்கள் மிதக்காமல் பறப்பது போல் உணர்ந்தோம்.
Tribal Symphony
பழங்குடியினரின் ஆடலும் பாடலும் மிக மிக அமர்க்களம்.
Dusk Drive
Trekking
ஒரு நாளை மிக அருமையாய் கழித்தோம் பரம்பிகுளத்தில், பிரிய மனமில்லாமால் விடைப் பெற்றோம். ஆழியார் அணை செல்லும் முன் வழியில் மாசாணி அம்மன் கோவில்.
ஆழியார் அணை
போதிய பராமாரிப்பு இல்லாமல் பாலிதீன் மற்றும் பிளாஷ்டிக் குப்பைகளாக நமக்கு வருத்தமே எஞ்சியிருக்கிறது. தமிழக வனத்துறையினரின் அலட்சியம் நம்மை மேலும் சோர்வடையச் செய்கின்றன.
இயற்கை மீதான கண்ணோட்டமும் கவனமும் செலுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது நிதர்சனம்.
புகைப்பட வல்லுநர்கள் - Photographers
1. Sankar Balu
2. Sajeesh Babu K
3. Muthukumaran Santhanakrishnan
4. Hemakumar Jayaraj
5. VijayaKumar Jayamani