Saturday, January 5, 2013

திருநீர்மலை - Thiruneer Malai

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. அக்காலத்தில் மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து இருந்த காரணத்தினால், திருநீர்மலை என்ற பெயர் உண்டானது.

தானாகத் தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, “ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநிலக் கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.

திருநீர்மலை, பெருமாளின் 108 திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று. இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.

இங்கு தரிசனம் செய்தால் திருமலை, ஸ்ரீரங்கம், திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம்.



நீர்வண்ண பெருமாள் (அடிவாரம்)


மலையின் உச்சி நோக்கி ...




கொடிமரம்






ரங்கநாதர்


உலகளந்த பெருமாள்


நரசிம்மர்


கோயில் உட்பிரகாரம் (Panoramic View)